top of page

கமலா சினிமாஸ்ல் ரீரிலீஸ் ஆகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எவர்கிரீன் பிளாக்பஸ்டர் ‘மூன்று முகம்'


டிஜிட்டல் முறையில் ரீமாஸ்டர் செய்யப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எவர்கிரீன் பிளாக்பஸ்டர் ‘மூன்று முகம்’ படத்தினை கமலா சினிமாஸ் ரீ-ரிலீஸ் செய்கிறது!


திரைப்பட ஆர்வலர்கள், பார்வையாளர்கள் என சினிமா ஆர்வலர்கள் கொண்டாடும் ஒரு இடமாக கமலா சினிமாஸ் இருந்து வருகிறது. தமிழ் சினிமாவின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து, பார்வையாளர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தை கொடுத்து வருகிறது. அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எவர் க்ரீன் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான ‘மூன்று முகம்’ படத்தின் டிஜிட்டல் ரீமாஸ்டர் செய்யப்பட்ட வெர்ஷனை கமலா சினிமாஸ் இப்போது மீண்டும் வெளியிடுகிறது.


இதுகுறித்து கமலா சினிமாஸ் உரிமையாளர் விஷ்ணு கமல் கூறும்போது, ​​“எங்கள் திரையரங்குகளில் வெளியாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படங்களை பல வருடங்களாக ஒவ்வொரு பார்வையாளர்களும் இதயப்பூர்வமாக கொண்டாடி வருகின்றனர். தற்போது அவரது பிரம்மாண்டமான திரைப்படமான ‘மூன்று முகம்’ டிஜிட்டல் முறையில் ரீமாஸ்டர் செய்யப்பட்ட பதிப்பை மீண்டும் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இப்படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆன போதிலும், ரஜினிகாந்த் சாரின் வசீகரத்திற்காகவும், சூப்பர் ஸ்டாரின் பஞ்ச் டயலாக் மற்றும் ஸ்டைலுக்காகவும் தற்போதைய தலைமுறை இளைஞர்கள் கூட கொண்டாடுகிறார்கள். 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10, 2023 அன்று திரையரங்குகளில் வெளிவர இருக்கும் இந்த சூழலில், இந்தப் படத்தை மீண்டும் வெளியிடுவதன் மூலம் ரஜினிகாந்த் சாருக்கும் அவரது ரசிகர்களுக்கும் மறக்க முடியாத ஒரு கொண்டாட்டத்தைக் கொடுக்க விரும்பினோம். இந்த வெளியீட்டை எளிதாக்கிய சத்யா மூவிஸ் சார் தங்கராஜ் அவர்களுக்கு கமலா சினிமாஸ் நன்றி தெரிவித்துக் கொள்கிறது" என்றார்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'மூன்று முகம்' நாளை (ஆகஸ்ட் 6, 2023) கமலா திரையரங்கில் வெளியாகிறது.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page