top of page

'சுழல்' இணைய தொடர் விமர்சனம் !

Updated: Jun 20, 2022


நீலகிரி மாவட்டம் சாம்பலூரில் மயான கொள்ளை திருவிழா மிக பிரம்மாண்டமாக தொடங்கும் நிலையில்,,

ஊர் மக்கள் வேலை செய்யும் சிமெண்ட் தொழிற்சாலையில் தொழிற் சங்க தலைவர் பார்த்திபன் முன்னிலையில் தொழிலாளிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மிக பெரிய போராட்டத்தை நடத்துகின்றனர் .

தொழிற்சாலையின் நிறுவனர் ஹரிஷ் உத்தமனின் பேச்சை மதிக்காமல் போராட்டம் தொடர .... காவல் ஆய்வாளர் ஸ்ரேயா ரெட்டி உத்தரவின் பேரில் உதவி காவல் ஆய்வாளர் கதிர் சக போலீசாருடன் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து தொழிற் சங்க தலைவர் பார்த்திபனை போலீசார் கைது செய்கின்றனர்.

மயான கொள்ளை முதல் நாள் திரு விழா நடைபெறும் போது தொழிற்சாலை திடீரென தீப்பற்றி எரிந்து கொண்டிருக்க அதே நேரத்தில் பார்த்திபன் இளைய மகள் நிலா காணாமல் போகிறார் .

இதற்கிடையில் ஸ்ரேயா ரெட்டியின் மகன் அதிசயம் மூணாறு செல்வதாக நண்பர்களுடன் செல்கிறான்.

உயர் அதிகாரி உத்தரவின் பேரில் நிலா காணாமல் போன தகவல் அறிந்த கதிர் பார்த்திபனின் மகளை தேடி கொண்டிருக்கும் போது, நிலாவின் பள்ளி id கார்டு ஒரு தெரு முனையில் கிடைக்க அந்த இடத்தில் இருக்கும் cctv பதிவில் ஒரு காரில் நிலா கடத்தப்படும் காட்சியினை பார்த்து அதிர்கிறார் .


இந்நேரத்தில் ஓய்வு பெற்ற அதிகாரி சந்தான பாரதி தொழிற்சாலையின் இன்சூரன்ஸ் தொகைக்காக தொழிற்சாலை மின்சார கசிவினால் எரிந்ததா அல்லது மர்ம நபர்களால் எரிக்கப்பட்டதா என ஒரு புறம் அதற்கான விசாரணையை நடத்தி கொண்டிருக்க ,,,,,,

மறு புறம் நிலாவை பற்றிய விவரங்களை கதிருடன் சேர்ந்து பார்த்திபனின் மூத்த மகளான ஐஸ்வர்யா ராஜேஷ்,,,, நிலாவின் பள்ளி தோழியான தேனப்பனின் மகளிடம் ...... விசாரணையில் இறங்க , ஸ்ரேயா ரெட்டியின் மகன் அதிசயம் தான் நிலாவை பின் தொடர்ந்தவன் அவன்தான் நிலாவை கடத்தியிருப்பான் என பள்ளி தோழி அதிர்ச்சி தகவல் தருகிறார்.

அதிர்ச்சியில் மிரண்ட கதிர் நிலாவை மீட்க மூணாறு செல்ல ,,,, அங்கு அதிசயத்தின் நண்பர்களை பிடித்து விசாரிக்கும் போது நிலாவும் அதிசயமும் காதலர்கள், அவர்கள் ஒருவரையொருவர் மனதார காதலிக்கின்றனர் நிலாவை அதிசயம் கடத்தவில்லை அவள் விருப்பப்படிதான் எங்களுடன் காரில் ஏறினாள் என மேலும் ஒரு அதிர்ச்சி தகவலை அதிசயத்தின் நண்பர்கள் விசாரணையில் சொல்கின்றனர் .

கதிரும் சக போலீசாருடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடும்போது ,,,,மயான கொள்ளை திருவிழாவில் அம்மனை குளத்தில் இறக்கும் நிகழ்வில் அதே குளத்தில் நிலாவும் அதிசயமும் கட்டிப்பிடித்த நிலையில் பிணமாக கண்டெடுக்கிறது போலீஸ் .

பின் இருவரும் கழுத்தறுக்க பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் இதில் நிலா கர்ப்பிணியாக இருக்கிறார் என போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் போலீசாருக்கு தெரிய வர!!!!!

இறுதியில் நிலாவையும் அதிசயத்தையும் கொலை செய்த கொலையாளி யார் ?


கொலையாளி இருவரையும் கொலை செய்ததற்கான காரணம் என்ன ?


நிலா கர்ப்பம் அடையுமளவில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மர்ம நபர் யார் ?


சந்தன பாரதியின் விசாரணையில் மின்சார கசிவினால் தொழிற்சாலை தீப்பற்றி எரிந்ததா அல்லது சில மர்ம நபர்களின் சதியால் தொழிற்சாலை எரிந்ததா என சுற்றி சுழலும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் இணைய தொடர்தான் 'சுழல்'


தொழிற் சங்க தலைவராக பார்த்திபன் , அவரது மகள்களாக ஐஸ்வர்யா ராஜேஷ் , கோபிகா ரமேஷ்,காவல் ஆய்வாளராக ஸ்ரேயா ரெட்டி , அவரது கணவராக பிரேம் , உதவி காவல் ஆய்வாளராக கதிர் , சித்தப்பாவாக குமரவேல் , ஓய்வு பெற்ற விசாரணை அதிகாரியாக சந்தான பாரதி.

இவர்களுடன் யூசுஃப் ஹுசைன், நிவேதிதா சதிஷ், , ஹரிஷ் உத்தமன் ,தேனப்பன் ,நிதிஷ் வீரா , இந்துமதி ,லதாராவ் , பழனி ,ஜீவா , எப்ஃஜே, என நடித்த அனைவருமே நடிப்பில் தங்கள் கதாபாத்திரங்களுடன் இணைந்து வாழ்ந்துள்ளனர் .


அனைத்து காட்சிகளும் குறிப்பாக இரவு நேர மயான கொள்ளை திருவிழா காட்சிகள் கண் முன்னே நிற்குமளவில் கதை களத்திற்கு பக்க பலமான முகேஷின் வண்ண மயமான ஒளிப்பதிவு !


பாடல்களிலும் ,பின்னணி இசையிலும் இணைய தொடர் முழுவதும் திரைக்கதையின் வேகத்திற்கு இணையாக அதிரடி இசையால் இசை தாண்டவம் ஆடுகிறார் இசை நாயகன் சாம் c s,,,,,

.

மிரட்டலான திரைக்கதையில் பரபரப்பான மயான கொள்ளை திருவிழா கதையுடன் பயணிக்க,,,,,, கதை முடிவுக்கு வரும் சில நிமிடங்கள் வரை உண்மையான குற்றவாளி யார் என இணைய தொடர் பார்க்கும் மக்களே குழம்பும் வகையில் புஷ்கர் -காயத்திரியின் எழுத்தில் அத்தியாயம் 1 முதல் 4 வரை இயக்குனர் பிரம்மாவும் , அத்தியாயம் 5 முதல் 8 வரை இயக்குனர் அனு சரணும் விறுவிறுப்பான திருப்பு முனைகளுடன் , சஸ்பென்ஸ் நிறைந்த திகில் கலந்த க்ரைம் திரில்லராக அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி இத் தொடரை இயக்கியுள்ளனர்.


'சுழல்' திகில் கலந்த க்ரைம் திரில்லர் !

3.5 / 5


bottom of page