‘ டெடி’ விமர்சனம்

கல்லூரி மாணவியான சாயிஷா பஸ்ஸில் பயணிக்கும்போது விபத்தில் சிக்கியிருக்கும் ஒருவனை காப்பாற்ற ப்போக அந்த நேரத்தில் அவரது கையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட , சாயிஷாவின் ரத்தத்தை சோதனை செய்யும் மருத்துவ திருட்டு கும்பல் சாயிஷாவின் ரத்தம் மிக அரிய வகை என்பதால் உடல் உறுப்புகளை திருடும் மருத்துவ கும்பலின் சதியால் சாயிஷா கோமா நிலைக்கு ஆளாக்கி அவரை கடத்திச் செல்கின்றனர்.
கோமா நிலையில் இருக்கும் சாயிஷாவின் ஆத்மா மருத்துவமனையில் இருக்கும் டெடி பியர் பொம்மைக்குள் புகுந்துவிட, அதனால் பேசும் பொம்மையாகும் டெடி பியர், அதிக ஞாபக சக்தி மூளை திறன் மற்றும் புத்திசாலிமிக்க இளைஞரான ஆர்யா ரெயிலில் ரௌடிகளிடமிருந்து ஒரு பெண்ணை காப்பாற்ற, அதனை பார்த்த டெடி பியர் பொம்மை ஆர்யாவை சந்தித்து தன் நிலையை சொல்ல ஆர்யா அதற்கு உண்டான பிரச்சனை அறிந்து அந்த டெடி பியர் பொம்மையுடன் சேர்ந்து சாயீஷாவை காப்பாற்ற அஜர்பைஜான் என்ற வெளிநாட்டுக்கு செல்கிறார்
ஆர்யா ,டெடி பியர் பொம்மையுடன் சேர்ந்து சாயீஷாவை காப்பாற்றினாரா?முடிவில் சாயிஷாவின் நிலையென்ன என்ற கேள்விகளுக்கு விடை சொல்லும் படம்தான் ' டெடி'

கதையின் நாயகனாக ஆர்யா வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தாமல் உடல் அமைப்பிலும் பேசும் வசனங்களிலும் வேறுபடுத்தி நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்
நாயகி சாயிஷா கதைப்படி சில காட்சிகள்தான் என்றாலும் நடிப்பில் யதார்த்தம்
வில்லனாக அறிமுக நடிகராக இயக்குநர் மகிழ்திருமேனி குரலில் மட்டுமே கம்பிரம் !
கருணாகரன், சதிஷ் ,மாசூம் சங்கர் ,சாக்க்ஷிஅகர்வால் நடிப்பில் இவர்களது பங்களிப்பு சிறப்பு
யுவாவின் ஒளிப்பதிவில் காட்சிகளும், டி இமானின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்கும் படி உள்ளது

இயக்குனர் சக்தி செளந்தர் ராஜன் இயக்கியுள்ள இப்படத்தின் ஆரம்பத்தில் இருந்த கதையின் வேகம் ,இடைவேளைக்கு பின் வரும் திரைக்கதையின் வேக தடையால் அழுத்தமான காட்சிகளும் எடுபடாமல் போகிறது.
சில காட்சிகள் நம்பும்படி இல்லை . குறைகள் இருந்தாலும் படம் முழுவதும் பேசும் டெடி பியர் பொம்மை ஆர்யாவுடன் சேர்ந்து காட்சிகள் அமைக்கப்பட்டதால் விறுவிறுப்புடன் இயக்கியுள்ளார் இயக்குனர் சக்தி செளந்தர் ராஜன்.
‘ டெடி' குழந்தைகளின் கொண்டாட்டம்