’தீதும் நன்றும்’ விமர்சனம்

மீன் மார்க்கெட்டில் வேலை செய்யும் நண்பர்களான ராசு ரஞ்சித்தும், ஈசனும் சந்தீப்ராஜுடன் சேர்ந்து இரவில், முகமூடி அணிந்து கொண்டு கொள்ளையில் ஈடுபடுகின்றனர் .
இதற்கிடையில் ஈசனுக்கும், அபர்ணா பாலமுரளிக்கும் காதல் மலர,
ராசு ரஞ்சித் உதவியுடன் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர் .
இரவில் தனியாக வரும் லிஜோமோல் ஜோசை வம்புக்கு இழுக்கும் ரௌடிகளிடம் இருந்து ராசு ரஞ்சித் காப்பாற்ற,
லிஜோமோல் ஜோஸ்அழகில் மயங்கிய ராசு ரஞ்சித் அவரை பின் தொடர லிஜோமோல்ஜோஸ் ராசு ரஞ்சித்தை காதலிக்கிறார் .
இந்நேரத்தில் சந்தீப்ராஜுடன் சேர்ந்து நண்பர்கள் இருவரும் ஒயின் ஷாப் கடையில் கொள்ளையில் ஈடுபடும்போது போலீசிடம் வசமாக சிக்கி கொள்கின்றனர்

இதில் சந்தீப்ராஜ் தப்பித்து கொள்ள நண்பர்கள் இருவரும் சிறைக்கு செல்கின்றனர்.
சிறை தண்டனை முடிந்து ராசு ரஞ்சித்தும், ஈசனும் மீண்டும் மீன்மார்க்கெட்டில் வேலை செய்யும் நிலையில் சந்தீப்ராஜ் இருவரிடமும் பெரிய தாதாவான கருணாகரனிடம் கொள்ளையடிக்கும் திட்டத்தை சொல்ல,
ஈசனின் குடும்ப சூழ்நிலைக்காக ராசு ரஞ்சித் ஒத்து கொள்ள ,பிடிவாதமாக ஈசனும் இந்த திட்டத்தில் சேர்ந்து செயல்பட மூவரும் சேர்ந்து கருணாகரன் ஒரு பெண்ணுடன் லாட்ஜில் இருப்பதை தெரிந்து அங்கு கொள்ளையடிக்க செல்ல ராசு ரஞ்சித்தும், ஈசனும் எதிர்பார்க்காத வகையில் சந்தீப்ராஜால் கொல்லப்படுகிறான் கருணாகரன்.
அதிர்ந்து போன இருவரும் சந்தீப்ராஜுடன் வாக்குவாதம் செய்யும் நேரத்தில் மற்றொரு தாதாவான காலயன் சத்யா ஆட்கள் அங்கு வர, அவர்களது சொல்படி நண்பர்கள் இருவரையும் கத்தியால் கொலை செய்கிறான் சந்தீப்ராஜ் !
இதில் ஈசன் இறந்து போக கொலையில் இருந்து பிழைத்த ராசு ரஞ்சித் அடுத்து என்ன செய்தார் என்பதுதான் இப்படத்தின் மீதிக்கதை !!
கதாநாயகிகளாக அபர்ணா பாலமுரளி, லிஜோமோல்ஜோஸ் கதைக்களத்தில் இருவரும் சரியான தேர்வு
நடிப்பில் அபர்ணா பாலமுரளி ஜொலிக்க அழகில் லிஜோமோல்ஜோஸ் ஜொலிக்கிறார்

ராசு ரஞ்சித்,ஈசன், ராசு ரஞ்சித்தின் நண்பராக வரும் இன்பா , காலயன் சத்யா, கருணாகரன் , வில்லனாக மிரட்டும் சந்தீப்ராஜ் என அனைவருமே தங்கள் கதாபாத்திரங்கள் மனதில் பதியும்படி மிக சிறப்பாக நடித்துள்ளனர்
கெவின் ராஜின் ஒளிப்பதிவும் சி.சத்யாவின் பின்னணி இசையும் பாடல்களும் கதையின் வேகத்திற்கு பக்க பலம் !!
இயக்குனர் ராசு ரஞ்சித் தெளிவான நேர்த்தியான திரைக்கதை அமைப்புடன் படத்தில் நடிக்கும் எல்லோரும் புதுமுக நடிகர்கள் என தெரியாத அளவில் அனைவரும் பாராட்டும் படி பட தொகுப்புடன் மிக திறமையாக இப்படத்தை இயக்கியுள்ளார் !
’தீதும் நன்றும்’ கைதட்டலுடன் சேர்ந்த பாராட்டு !!