top of page

' வெனம் : லெட் தேர் பி கார்னேஜ்' விமர்சனம்


செய்தியாளராக இருக்கும் டாம் ஹார்டி உடலுக்குள் வெனம் புகுந்து அவருக்கு உதவி புரியும் நிலையில், சீரியல் கொலைகாரனாக இருக்கும் வூடி ஹாரெல்சனை பற்றிய , டாம் ஹார்டியின் செய்தியின் காரணமாக வூடி ஹாரெல்சனுக்கு மரண தண்டனை கிடைக்கிறது .


இந்நேரத்தில் ஜெயிலில் உள்ள வில்லன் வூடி ஹாரெல்சன் டாம் ஹார்டியை சந்தித்து பேசுவதற்கு அழைக்கும் நிலையில் , தன்னை சந்திக்க வந்த டாம் ஹார்டியின் கையை வெறித்தனமாக கடித்துவிடுகிறார் வில்லன் வூடி ஹாரெல்சன் .


இந்நிலையில் வூடி ஹாரெல்சனுக்கு சிறையில் ஜெயில் அதிகாரிகள் மரண தண்டனையை நிறைவேற்றும் சமயத்தில் கொடிய குணம் கொண்ட கார்னேஜ், வில்லன் வூடி ஹாரெல்சனின் உடலில் புகுந்து கொள்ள , அனைவரையும் கொன்று கோர தாண்டவம் ஆடுகிறார் வில்லன் வூடி ஹாரெல்சன்.


வெனத்தின் உதவியுடன் நாயகன் டாம் ஹார்டி, கொடுமைக்கார கார்னேஜாக மாறிய வில்லன் வூடி ஹாரெல்சனை எப்படி அழித்தார் என்பதுதான் '' வெனம் : லெட் தேர் பி கார்னேஜ்' படத்தின் கதை !


வெனம், கார்னேஜ் மோதி கொள்ளும் சண்டைக்காட்சிகளை கிராபிக்ஸ் முறையில் பிரம்மாண்டமாக பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் கொண்டாடும் விதமாக அமைத்துள்ளனர் .


ரசிகர்களை கவரும் விதத்தில் மிக சிறப்பாக இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஆண்டி செர்கிஸ்.

bottom of page