top of page

நடிகை ஷாம்லியின் தனி கலை நிகழ்ச்சியான ’SHE’-யில் கலந்து கொண்ட இயக்குநர் மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான்!

  • mediatalks001
  • Jun 25, 2023
  • 1 min read

ree

ree

ree

ree

ree

இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடிகை ஷாம்லியின் தனி கலை நிகழ்ச்சியான ’SHE’-யில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!


சென்னை (ஜூலை 23, 2023): நடிகை ஷாம்லியின் தனி கலை நிகழ்ச்சியான ‘SHE’-யில் இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சென்னையில் உள்ள ஃபோகஸ் ஆர்ட் கேலரியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.


ree

ree

ree

ree

ree

குழந்தை நட்சத்திரமாகவும், முன்னணி நடிகையாகவும் நம் மனதைக் கவர்ந்த நடிகை ஷாம்லி, தனது கலை ஆர்வத்தாலும் ரசிகர்களை கவரத் தவறவில்லை. 65 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பால் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களின் இதயங்களை வென்று, இந்திய தேசிய விருதுகள், தமிழ், தெலுங்கு மற்றும் கர்நாடகா மாநில விருதுகள் போன்ற சிறந்த விருதுகளை வென்ற நடிகை, இப்போது கலைத் துறையில் தனது சாதனைகளுக்காக மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார்.



சித்ர கலா பரிஷத் உட்பட இந்தியா மற்றும் துபாய் முழுவதும் கலை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். அவரது முந்தைய சாதனைகளாக மாறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், வெண்பா கேலரியின் கிராஸ் ரோட்ஸ், சதர்ன் டிரெண்ட்ஸின் சித்ர கலா பரிஷத், உலக வர்த்தக மையமான துபாயில் பெங்களூரு இண்டர்நேஷனல் செண்டர் சதர்ன் டிரெண்ட்ஸ் வேர்ல்ட் ஆர்ட் துபாய் ஆகியவற்றைத் தொடர்ந்து இப்போது அவர் சென்னையில் ’She' என்ற தலைப்பில் அவரது மற்றொரு அற்புதமான கலைப்படைப்பைக் காட்சிப்படுத்தியுள்ளார்.

ree

ree

ree

ree

இந்தியத் திரைப்படத் துறையின் பெருமையாக கருதப்படும் இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு ஷாம்லியின் சிறந்த படைப்புகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


விஷுவல் கம்யூனிகேஷனில் புகழ்பெற்ற கல்விப் பட்டப்படிப்பு மற்றும் சிங்கப்பூரில் உள்ள லசால் கலைக் கல்லூரியில் விஷுவல் ஆர்ட்ஸில் டிப்ளமோ பட்டம் பெற்ற ஷாம்லி, கலைத் தொழிலில் முழு கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். கடந்த 6 ஆண்டுகளில் அவரது வழிகாட்டியான ஆர்டிஸ்ட் திரு. ஏ.வி. இளங்கோவிடமிருந்து முறையான வழிகாட்டுதலையும் பயிற்சியையும் பெற்று தனது திறமைகளை மேம்படுத்தியுள்ளார்.

ree

ree

ree


ஷாம்லி பாரீஸ் கலைக் கல்லூரியில் ஆக்கப்பூர்வமான பயிற்சியையும், சிங்கப்பூரில் சீன இங்க் (Chinese ink), புளோரன்ஸ் அகாடமியா ரியாசியில் கண்ணாடி ஓவியம் வரைவதில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சென்னை, ஆழ்வார்பேட்டை, அஸ்வினி மருத்துவமனைக்கு அடுத்துள்ள கஸ்தூரி எஸ்டேட் 2வது தெருவில், ஃபோகஸ் ஆர்ட் கேலரி, எண்.11ல், ‘SHE’ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் 30, 2023 வரை நிகழ்ச்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி இவை இருக்கும்.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page