MediaTalks Logo
Header Advertisement
reviews
6 November 2026 at 23:52•75 Views

‘நூறு கோடி வானவில்’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
‘நூறு கோடி வானவில்’ - விமர்சனம்

மும்பையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஹரிஷ் கல்யாண்பதவி உயர்வுக்காக கோவாவுக்குச் செல்கிறார்.

கோவாவில் வெற்றிகரமான இயக்கத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியை உருவாக்கினால் தனக்கான அடுத்தகட்ட முன்னேற்றமான பதவி உயர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தம்பி ராமையாவை சந்திக்கிறார்

இந்நிலையில் கோவை சரளாவின் பேத்தியான சித்தி இத்னானியை தம்பி ராமையா ஹரிஷ் கல்யாணுக்கு அறிமுகம் செய்து வைக்க அவரது நட்பு கிடைக்கிறது.

கோவாவில் சுற்றுலா வழிக்காட்டியாக பணியாற்றி வரும் நாயகி சித்தி இத்னானி, பள்ளி பருவ வயதில் ஏற்பட்ட காதலின் தாக்கத்தில் ரினிலை காதலிக்கிறார் .

ஒரு கட்டத்தில் காதலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கோமாவில் இருந்தாலும், தன் ஒவ்வொரு நாட்களையும் காதலரின் நினைவுகளோடு கடந்து செல்கிறார்.

கோமாவில் ரினில் இருக்கும் நாட்களில் அவருக்காகத் தனது அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகளை வீடியோவாகப் பதிவு செய்கிறார் சித்தி இத்னானி

சித்தி இத்னானியின் காதலன் ரினில் கோமாவில் இருப்பது தெரிந்தும் சித்தி இத்னானியின் அன்பான பேச்சில் மயங்கும் ஹரிஷ் கல்யாணுக்கு அவர் காதல் மலர்கிறது.

ஹரிஷ் கல்யாணின் செயலாலும், அக்கறையாலும் ஈர்க்கப்படும் சித்தி இத்னானி, தனது முந்தைய காதலுக்கு மரியாதை கொடுத்து ஹரிஷ் கல்யாணிடம் இருந்து விலகிச் செல்ல நினைக்கிறார் .

அதே சமயம், சித்தி இத்னானிக்கு தன் மீது இருக்கும் காதலை வெளிக்கொண்டு வர ஹரிஷ் கல்யாண் முயற்சிக்கிறார்.

ரினில் மீதான காதலை கைவிட முடியாமல் சித்தி இத்னானி தவிக்கும் நேரத்தில் கோமாவிலிருந்து ரினில் குணமடைந்து திரும்புகிறார்.

இறுதியில் முக்கோண காதலால் ஏற்படும் உணர்ச்சிகரமான போராட்ட வாழ்க்கையை உணர்வுப்பூர்வமாக சொல்லும் படம்தான் ‘நூறு கோடி வானவில்’.

இளமை துள்ளலான நடிப்பில் நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண் காதல் ,தவிப்பு ,ஏக்கம் ,வெறுப்பு என அனைத்து உணர்வுகளையும் உள் வாங்கி உணர்வுபூர்வமான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .

அழுத்தமான கதாபாத்திரத்தில் உணர்ச்சிகரமாக நாயகியாக நடித்திருக்கும் சித்தி இத்னானி இயல்பான நடிப்பில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார் .

சித்தி இத்னானியின் காதலராக நடித்திருக்கும் ரினில் ,விஜே பார்வதி,கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த் ,சம்பத் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் நடிப்பில் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

சித்து குமாரின் இசையும் ,ஒளிப்பதிவாளர் பிரசன்னா கே.குமாரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .

இயல்பான காதல் கதையுடன் முக்கோண காதலை மையமாக வைத்து காதலர்களின் உணர்வுகள் மற்றும் காதலர்களின் மனப் போராட்டங்ளுடன் காதலுடன் காதலருக்கு உண்மையாய் இருந்து எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளையும் இழந்து தவிக்கும் ஒரு பெண்ணின் குழப்பமான மனப் போராட்டத்தை அழுத்தமான திரைக்கதை அமைப்பில் உணர்வுப்பூர்வமாக சொல்வதுடன் அனைவரும் ரசிக்கும் மென்மையான காதல் படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சசி.

மொத்தத்தில், ‘நூறு கோடி வானவில்’ காதலுக்கு மரியாதை

ரேட்டிங் - 3.5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: