top of page

உலகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் கவின்- அபர்ணா தாஸ் நடிக்கும் 'டாடா'

mediatalks001

ஒலிம்பியா மூவிஸ் S. அம்பேத் குமார் வழங்கும் கணேஷ் K பாபு இயக்கத்தில் கவின்- அபர்ணா தாஸ் நடிக்கும் 'டாடா' படத்தை உலகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது


நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள 'டாடா' திரைப்படம், அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் படத்தின் முதல் பார்வை மற்றும் வெளியாகியுள்ள பாடல்கள் இந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது. படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது. இந்த நிலையில், படத்தினை உலகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.


அழகான ரொமாண்டிக் எண்டர்டெயினர் படமான 'டாடா' சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. கணேஷ் K பாபு எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தை ஒலிம்பியா மூவிஸ் S. அம்பேத் குமார் தயாரிக்கிறார்.


படத்தின் ஆடியோ, ட்ரைய்லர் மற்றும் திரையரங்குகளில் வெளியீட்டு தேதி குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.


அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடிக்க, K பாக்யராஜ், ஐஷ்வர்யா, 'முதல் நீ முடிவும் நீ' புகழ் ஹரிஷ், வாழ்' புகழ் பிரதீப் ஆண்டனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.


தொழில்நுட்பக் குழு:


ஒளிப்பதிவு: எழில் அரசு K,

இசை: ஜென் மார்ட்டின்,

படத்தொகுப்பு: கதிரேஷ் அழகேசன்,

கலை: சண்முக ராஜ்,

ஆடை வடிவமைப்பு: சுகிர்தா பாலன்,

தயாரிப்பு நிர்வாகி: APV மாறன்,

ஒலி வடிவமைப்பு: அருணாச்சலம் சிவலிங்கம்

Comments


©2020 by MediaTalks. 

bottom of page