top of page
mediatalks001

பாலிவுட் நடிகை எல்னாஸ் நோரூஸி 'ரோஸி' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் 'டெவில்'


நந்தமுரி கல்யாண் ராம் நடிப்பில் தயாராகும் ஸ்பை திரில்லர் படமான 'டெவில்' எனும் திரைப்படத்தில் பாலிவுட் நடிகை எல்னாஸ் நோரூஸி, 'ரோஸி' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்


நந்தமுரி கல்யாண் ராம் திரையுலகில் அறிமுகமாகும் போதே தனித்துவமான திரைக்கதைகளை தேர்வு செய்து நடித்து நற்பெயரை சம்பாதிப்பதில் பெயர் பெற்றவர். இவர் தற்போது மற்றொரு சுவாரசியமான திரைப்படத்தில் நடித்திருக்கிறார். கதாநாயகனின் மூர்க்கத்தனத்தை குறிக்கும் வகையில் 'டெவில்' என பரபரப்பாக பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் 'பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட்' என்ற வாசகத்துடன் வெளியாகிறது. இப்படத்தை அபிஷேக் நாமா இயக்கி, தயாரித்திருக்கிறார்.


இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை மாளவிகா நாயரின் கேரக்டர் போஸ்டரை வெளியிட்டு பார்வையாளர்களையும், ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியது. இதனை தொடர்ந்து தற்போது படத்தின் தயாரிப்பாளர்கள், பாலிவுட்டின் முன்னணி நடிகை எல்னாஸ் நோரூஸி நடித்திருக்கும் ' ரோஸி' எனும் கதாபாத்திர போஸ்டரை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.


இதை தெரிவித்துவிட்டு, ''திறமை வாய்ந்த நடிகை எல்னாஸ் நோரூஸியை‌- 'டெவில் ரோஸி'யாக அறிமுகப்படுத்துகிறோம். அவரது திரைத்தோன்றல் ரசிகர்களையும், பார்வையாளர்களையும் திரையரங்குகளில் கலாட்டா செய்ய வைக்கும். பாலிவுட் அழகி எல்னாஸ் நோரூஸி நடன அரங்கில் தன்னுடைய துள்ளலான நடன அசைவுகளால் பார்வையாளர்களை கவர்வார் என்பது போஸ்டரில் தெளிவாக தெரிகிறது'' என குறிப்பிட்டுள்ளனர்.


விருது பெற்ற பல படைப்புகளை வழங்கி திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனம் என பெயர் பெற்ற அபிஷேக் பிக்சர்ஸ் இந்த 'டெவில்' திரைப்படத்தை வழங்குகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளான காந்தி நதிக்குடிகர் பார்வையாளர்களுக்கு அற்புதமான காட்சி அனுபவத்தை வழங்குவதற்காக விடாமுயற்சியுடன் பணியாற்றியிருக்கிறார்.


நந்தமுரி கல்யாண் ராம், சம்யுக்தா, மாளவிகா நாயர், எல்னாஸ் நோரூஸி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்ய, ஹர்ஷவர்தன் ராமேஸ்வர இசையமைத்திருக்கிறார்.‌ கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீகாந்த் விசா மற்றும் அவரது குழுவினர் எழுத, தம்மி ராஜு படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்



Komentáře


bottom of page