top of page
mediatalks001

“ஜவான்” படத்திலிருந்து அடுத்ததாக யாருடைய கேரக்டர் போஸ்டர் வெளியாகும் என படக்குழு தந்த க்ளூ !!


“ஜவான்” திரைப்படத்திலிருந்து அடுத்ததாக யாருடைய கேரக்டர் போஸ்டர் வெளியாகும்? உங்களால் யூகிக்க முடிகிறதா ? இதோ படக்குழு தந்த க்ளூ


கிங்கான் ஷாருக்கானின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆக்‌ஷன் எண்டர்டெய்னர் திரைப்படமான ‘ஜவான்', ரசிகர்களின் உற்சாகத்தை புதிய உச்சத்திற்கு எடுத்து சென்றுள்ளது. சமீபத்தில் வெளியான விறுவிறுப்பான ப்ரிவ்யூ, மொட்டை தலையுடன் புது அவதாரத்தில் தோன்றும் SRK, அதிரடி அவதாரத்தில் காட்சியளிக்கும் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டரைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் இப்போது படத்தின் மற்றொரு புதிய கதாப்பாத்திரம் பற்றிய சிறு க்ளிம்ப்ஸ வெளியிட்டுள்ளனர். இந்த ஸ்னீக் பீக் ரசிகர்களிடம் அது யாராக இருக்குமென்ற பெரும் ஆவலை தூண்டியுள்ளது.


'ஜவான்' படத்தின் தயாரிப்பாளர்கள் தங்கள் சமூக ஊடகங்களின் வழியே, படம் குறித்தும் அடுத்ததாக வெளியாகும் கதாப்பாத்திரம் பற்றிய குறிப்பையும் வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் தங்கள் சமூக ஊடகத்தில்..,


“அவர் உங்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்! நீங்கள் அவருக்காக சிறிது காத்திருங்கள் ” என்று பதிவிட்டுள்ளனர்.


https://twitter.com/redchilliesent/status/1683001449159213057?s=46&t=PusltWkTns46RNMqjWxAeA


“ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Comments


bottom of page