top of page
mediatalks001

உச்சகட்டத்தை எட்டியுள்ளஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு !


ஆரம்பமானது “ஜவான்” கவுண்டவுன்!! காத்திருங்கள் இன்னும் ஒரு மாதத்தில் வெள்ளித்திரையில்!!


கிங் கான் ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஜவான் படத்தின் ஒவ்வொரு செய்தியும் தலைப்பு செய்தியில் இடம்பிடித்து வருகிறது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் இன்று சமூக ஊடகத்தில், புத்தம் புதிய போஸ்டரை வெளியிட்டு படத்திற்கான கவுண்டவுனை துவக்கி வைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 7, 2023 அன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது.


'ஜவான்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மாதங்களாக தொடர்ந்து வருகிறது, இந்த போஸ்டர் மிகப்பெரிய வெளியீட்டிற்கான இறுதி கவுண்டவுனாக அமைந்துள்ளது. இப்படத்தின் முந்தைய அறிவிப்புகள், ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை உருவாக்கியதோடு, பார்வையாளர்களிடமிருந்து பெரும் அன்பையும் பெற்றது.


ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Comments


bottom of page