top of page
mediatalks001

ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு மத்தியில் வெற்றியை கொண்டாடிய 'ஜவான்' படத்தின் படக்குழு !


ஜவான் வெளியீட்டுக்குப் பின்னர் வெற்றியை கொண்டாடிய செய்தியாளர் சந்திப்பில் ஜவானின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கு கொண்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர், மேலும் இந்நிகழ்வில், மீடியா மற்றும் ரசிகர்களுக்காக அனிருத்தும் ராஜகுமாரியும் பாடல் பாடினர் !


உலகம் முழுவதும் ஜவான் படத்திற்கான பிரமாண்ட வரவேற்பு மற்றும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு மத்தியில், படக்குழு வெற்றியை கொண்டாடும் விதமாக செய்தியாளர் சந்திப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் அபாரமான வசூல் எண்ணிக்கையுடன், இன்னும் வெற்றிநடை போட்டு இன்னும் பல புதிய சாதனைகளை படைத்து வருகிறது. வெற்றிக்கு நன்றி சொல்லும் வகையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் முக்கிய நட்சத்திரக் குழுவினர் கலந்துகொண்டு, ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு வெகு விமரிசையாக நடந்து முடிந்தது.



பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜவான் படத்தின் பாடல் நிகழ்ச்சியை படக்குழு நிகழ்த்தியது. இந்நிகழ்ச்சி மும்பையில் 2 மணி நேரம் மாலையில் நடைபெற்றது. படத்தின் ஒலிப்பதிவு மற்றும் பின்னணி இசையமைத்த அனிருத் ரவிச்சந்தர், சந்திப்பின் போது நேரலையில் இசையமைத்தார், கிங் கானின் ராப் டிராக்கை எழுதி பாடிய ராஜ குமாரியும் இதில் பங்குகொண்டார். ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனேவுடன், விஜய் சேதுபதி, சுனில் குரோவர், சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பெண் கலைஞர்களும் மற்றும் ஜவானின் முழு நட்சத்திரக் குழுவினரும் கலந்து கொண்டனர். இதில் இயக்குநர் அட்லியும் கலந்து கொண்டு சிறப்பித்தார். நாயகி நயன்தாரா சில காரணங்களால் பங்கேற்க முடியாததால், ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு அன்பான வாழ்த்துக்களை அனுப்பினார். இவர்களைத் தவிர, ஜவானுக்குப் பின்னால் முதுகெலும்பாக இருந்த ஜவானின் தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் சாலேயா பாடலுக்கு SRK மற்றும் தீபிகா படுகோனே நடனமாடி அசத்தினர். இதற்கு முன்னதாக, SRK நாட் ராமையா வஸ்தாவய்யா பாடலையும் நேரலையில் நிகழ்த்தினார், அவரது வசீகரமான நடனத்தால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.


“ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது.

Comments


bottom of page