MediaTalks Logo
Header Advertisement
reviews
13 November 2026 at 22:53•127 Views

’ஃப்ளாக்’ (FLAG) - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
’ஃப்ளாக்’  (FLAG)  - விமர்சனம்

கன்னியாகுமரியில் தாய் தந்தையை விபத்தில் இழந்த பள்ளியில் படிக்கும் சிறுவனான திஹான் தனது தாத்தா அரவணைப்பில் கர்நாடகாவில் வளர்கிறார்.

இந்திய தேசியக் கொடி தயாரிக்கும் இடமான கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகேயுள்ள பெங்கேரி கிராம த்தில் பணியாற்றும் தாத்தாவுக்கு டெல்லி செங்கோட்டையில் ஜனாதிபதி ஏற்றும் தேசியக் கொடியை நேரில் பார்க்க வேண்டும், என்பது நீண்ட நாள் கனவு.

இந்நிலையில் தாத்தா உடல்நிலை பாதிக்கப்பட்டு திடீரென படுத்தப் படுக்கையாகி விடுகிறார்.

தாத்தாவின் கனவை நிறைவேற்ற முடிவு செய்யும் திஹான் தனியாக டெல்லி நோக்கி பயணிக்கிறார்.

டெல்லி நோக்கி பயணிக்கும் திஹான் கேரளா , மும்பை , உத்திர பிரதேசம், காஷ்மீர் என அனைத்து மாநிலங்களையும் தாண்டி பயணிக்கும்போது பலவிதமான தடைகளையும் , தீவிரவாத மனிதர்களையும் சந்திக்கிறார்.

இறுதியில் பல தடைகளை கடந்து தனது தாத்தாவின் கனவான டெல்லியில் செங்கோட்டையில் ஜனாதிபதி ஏற்றும் தேசியக் கொடியை நேரில் பார்த்து சந்தோஷப்பட்டாரா ? இல்லையா ? என்பதுதான் நாட்டுப்பற்றுடன் உருவாக்கப்பட்ட ’ஃப்ளாக்’ (FLAG)படத்தின் மீதி கதை

தன் பயணத்தில் பலவிதமான இடையூறுகளையும், மனிதர்களையும் சந்திக்கும் திஹான், தனது தாத்தாவின் கனவை நிறைவேற்றினாரா? இல்லையா ? என்பதை மக்கள் உள்ளத்தில் இயல்பாக இருக்கும் நாட்டுப்பற்றை அடையாளம் கண்டு, அதைச் சமூகப் பொறுப்பாக மாற்றும் வகையில் சொல்வதே ‘ஃபிளாக்’ (FLAG).

மோகனவேல் என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் சிறுவன் திஹான் இயல்பான குறும்புத்தனமான நடிப்பால் பெற்றோரை இழந்து தவிக்கும் சோகம் ,தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற டெல்லி செல்லும் பயணத்தில் எதிர்கொள்ளும் எதிர்பாராத சம்பவங்களில் உணர்வுபூர்வமான குழந்தை தன நடிப்பில் சிறப்பாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறார் ..

கிரி துவாரகேஷ், மிக்கி மக்கி ஜா ஆனந்த், அபிநவ் கோசாமி, அமீர் மாலிக், பபுஷா, என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் சிறப்பான நடிப்பில் பயணித்திருக்கிறார்கள்.

ராஜா ரவி வர்மா மற்றும் பாலசுப்பிரமணியம் இசையும் , ஒளிப்பதிவாளரான இயக்குநர் எஸ்.பி.பொன்சங்கர் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .

தன் தனது தாத்தாவின் கனவை நிறைவேற்ற டெல்லி நோக்கி செல்லும் ஒரு சிறுவனின் பயணத்தை மையமாக கொண்ட கதையுடன் தாய்நாட்டின் மீதான அன்பான மரியாதை, நாட்டு பற்று , கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நம் பாரதத்தின் ஒவ்வொரு மாநிலத்தின் மொழி, கலை, உணவு மற்றும் கலாச்சார பண்பாடுகள் என அழுத்தமான திரைக்கதை அமைப்பில் கதையை நகர்த்துவதுடன் இன்றைய தலைமுறை சிறுவர்களுக்கு சமுக பொறுப்புடன் ஆழமான தேசிய பற்றை அவர்களின் மனதில் விதைக்கும் வகையில் குடும்பத்துடன் அனைவரும் பார்க்க வேண்டிய சிறந்த படமாக ஒளிப்பதிவுடன் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் எஸ்.பி.பொன்சங்கர்

மொத்தத்தில், ’ஃப்ளாக்’ (FLAG) தேசியக் கொடியின் பெருமை

ரேட்டிங் 3.5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: