MediaTalks Logo
Header Advertisement
cinema news
9 November 2026 at 13:04•149 Views

'ஆர்.எக்ஸ் - RX' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
'ஆர்.எக்ஸ் - RX' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு

ஜீ ஸ்குவாட்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் 'ஆர்.எக்ஸ் - RX' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு

இந்திய சினிமா ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படைப்பாளி லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனமும், இந்திய திரையுலகின் வெற்றிகரமான முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் முதன்முறையாக இணைந்து தமிழில் தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஆர் எக்ஸ் - RX' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Image
Image

சில நேரங்களில் சில மனிதர்கள்', 'பாம் - Bomb' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் 'ஆர். எக்ஸ் - RX' . இதில் நாசர், ரெஜினா கசாண்ட்ரா, ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இதன் கதையை ஹரிஹரன் ராஜு எழுத, எஸ். கே. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்க, ஜி. கே. பிரசன்னா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கே. மனோஜ் குமார் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார்.

ட்ராமா திரில்லராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்குவாட் - மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் லோகேஷ் கனகராஜ் - நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு 'ஆர் எக்ஸ் - RX' என்ற டைட்டிலும், அதற்கான ஃபர்ஸ்ட் லுக் - செகண்ட் லுக் போஸ்டர்களையும் தீபாவளி திருநாளை முன்னிட்டு படக்குழுவினர் வாழ்த்துக்களுடன் வெளியிட்டுள்ளனர்.

Image
Image

இதில் கதையின் நாயகியான ரெஜினா கசாண்ட்ரா - முக கவசத்தை அணிந்து தீர்க்கமான பார்வையுடன் தோன்றுவதும்... செகண்ட் லுக்கில் ரயிலில் பயத்துடன் பயணிப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பதும் ... படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது. மேலும் 'ஆர் எக்ஸ்- RX' என்ற டைட்டில்- நோயாளிகளை பரிசோதித்த பின் மருத்துவர்கள்.. அவர்களின் நோயை குணப்படுத்துவதற்காக பரிந்துரைக்கும் பிரிஸ்கிரிப்ஷனில்.. இந்த ' RX' இடம் பிடித்திருக்கும் என்பதால்.. மெடிக்கல் மாஃபியாவை பற்றிய திரில்லர் படைப்பாக இருக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பையும் உண்டாக்கி இருக்கிறது.

ஆர் எக்ஸ் - RX' படத்தை பற்றிய புதிய தகவல்களை படக்குழுவினர் தொடர்ச்சியாக வெளியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு... திரை ஆர்வலர்களிடத்திலும் , இணையவாசிகளிடமும் ஏற்பட்டிருக்கிறது.

——————————————————-

நடிகர்கள்: - நாசர், ரெஜினா கசாண்ட்ரா , ரமேஷ் திலக் , ஸ்ரீஜா ரவி ..

தொழில்நுட்பக் குழு

இயக்கம்: விஷால் வெங்கட்

எழுத்து : ஹரிஹரன் ராஜு

வசனம் : ஆஷாமீரா ஐயப்பான்

ஒளிப்பதிவு: செல்வகுமார் S.K

இசை: ஹேஷம் அப்துல் வஹாப்

படத்தொகுப்பு: பிரசன்னா G.K

தயாரிப்பு வடிவமைப்பு: மனோஜ் குமார் R.K

ஆடை வடிவமைப்பு: ஜீவா காருண்யா

பாடலாசிரியர்: கார்த்திக் நேத்தா, விஷ்ணு எடவன்.

ஒலி வடிவமைப்பு: அருண் S. மணி

(Oli Sound Labs)

ஒலி கலவை: M.R. ராஜகிருஷ்ணன் (RK Studios)

ஒப்பனை: விஜய் ராஜ்

VFX மேற்பார்வையாளர் :-

G.E. அசோக் குமார்

DI :- Mango post

வண்ணத் திருத்தம் :- ஃபிராங்க்ளின் (Mango Post)

விளம்பர வடிவமைப்பு:- வியாகி

தயாரிப்பு நிறுவனங்கள்: மைத்ரி மூவி மேக்கர்ஸ் & ஜீ ஸ்குவாட்.

தயாரிப்பு :- ஒய். ரவி சங்கர், நவீன் யெர்னேனி, லோகேஷ் கனகராஜ்.

இணைத் தயாரிப்பாளர்: பிரதீப் பூபதி

தலைமைச் செயல் தயாரிப்பாளர்:

ஏ. ஜெய்சம்பத்

தயாரிப்பு நிர்வாகி: பி. எல். பாலாஜி

தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்:

எம். கோவிந்தராஜ்

மக்கள் தொடர்பு :- சுரேஷ்சந்திரா, திரு

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: