

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த சித்தார்த் வாழ்க்கையில் மிக பெரிய பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில் தன்மானமுள்ள மனிதனாக ஒவ்வொரு இடத்திலும் வேலையில் நீடிக்க முடியாமல் ஒரு ட்ராவல்ஸில் விலையுயர்ந்த காரான பென்ஸ் காரை ஓட்டும் டிரைவராக வேலைக்கு சேர்கிறார்.
ஒரு கட்டத்தில் மிக பெரிய தொழிலதிபரின் மகளான திவ்யான்ஷா சித்தார்த்தின் காரில் பயணிக்கும்போது அவரது அழகில் மயங்குகிறார் சித்தார்த்.
இந் நேரத்தில் பணத்திற்காக இளம் பெண்களை கடத்தி விற்பனை செய்யும் ஒரு கும்பல் திவ்யான்ஷாவை கடத்த முயற்சி செய்கிறது.
மறுபுறம் சித்தார்த் டிரைவராக பணிபுரியும் பென்ஸ் கார் சேதமடைய, மிக விலையுயர்ந்த கார் என்பதால் இதனை ஈடு செய்ய சில வருடங்கள் சித்தார்த் ஊதியம் இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என நிர்பந்தம் செய்து அடித்து சித்தார்த்தை கேவலமாக நடத்துகிறார் ட்ராவல் உரிமையாளர் .
இதனால் மனமுடையும் சித்தார்த் தற்கொலை செய்து கொள்ள முயல,, நண்பன் r j விக்னேஷ் அவரை காப்பாற்றும் நேரத்தில் ஒரு பிரச்சனையால் அபிமன்யு சிங் இல்லாத நேரத்தில் அவரது கடத்தல் கும்பலை சித்தார்த் அடித்து நொறுக்கி, அங்கிருந்து தப்பிப்பதற்காக அவர்களின் காரை எடுத்து செல்கிறார்.
அந்த காரின் டிக்கியில் கடத்தப்பட்ட திவ்யான்ஷா இருக்கும் நிலையில் இருவரும் நெருங்கி பழக சித்தார்த்தை மனதார விரும்புகிறார் திவ்யான்ஷா.
அபிமன்யு சிங் தலைமையில் கடத்திய கும்பல் திவ்யான்ஷாவை,,, தேடுகிறது ,
இந் நிலையில் முனிஷ் காந்த் மூலமாக அபிமன்யு சிங்குக்கு தகவல் கிடைக்க,, அதன்பின் rj விக்னேஷ் பணயமாக வைத்து திவ்யான்ஷாவை தன்னிடம் ஒப்படைக்க சித்தார்த்தை மிரட்டுகிறார் அபிமன்யு சிங்.
மிரட்டலுக்கு பயந்த சித்தார்த் அபிமன்யு சிங் இருக்கும் இடத்திற்கு திவ்யான்ஷாவுடன் செல்கிறார்
முடிவில் சித்தார்த் நண்பனுக்காக திவ்யான்ஷாவை அபிமன்யு சிங்கிடம் ஒப்படைத்தாரா ?
மீண்டும் கடத்தல் கும்பலிடம் தன்னை ஒப்படைக்க நினைத்த
சித்தார்த்தை திவ்யான்ஷா என்ன செய்தார் ? என்பதை சொல்லும் படம்தான் 'டக்கர்'
கதையின் நாயகனாக துறு துறு இளைஞனாக சித்தார்த் ,,,,, பணக்காரனாக வேண்டும் ஆசையில் அவர் எடுக்கும் முயற்சியில் ஏற்படும் அவமானங்களில் உணர்ப்பூர்வமான நாயகனாகவும் , காதல் காட்சிகளில் காதல் மன்னனாகவும் ரசிக்கும்படியான நடிப்பில் அசத்துகிறார் .
இளமை ததும்பும் நாயகியாக திவ்யான்ஷா இளசுகளை ஏங்க வைக்கும் நடிப்பில் இயல்பாக நடிக்கிறார் .
யோகி பாபு படம் முழுவதும் வந்தாலும் சில காட்சிகளில் மட்டுமே சிரிக்க வைக்கிறார் .
நிவாஸ் கே பிரசன்னாவின் கேட்கும் ரகமான இசையும்,,,வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவும் ,,,, படத்திற்கு பக்க பலம் .
மிக பெரிய பணக்காரனாக வேண்டும் என ஆசைப்படும் நாயகன் ,, தன் ஆசையை நிறைவேற்ற எடுக்கும் முயற்சியில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்ட கதையில் ,, இளமை துள்ளலான காதலுடன் ,,, முதல் பாதியை விட இடைவேளைக்கு பின் அழுத்தமான திரைக்கதையின் காட்சிகளினால் ஆக்க்ஷன் கலந்த அனைவரும் ரசிக்கும் காதல் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ்.
ரேட்டிங் : 3 .5 / 5
' டக்கர் ' - ஆக்க்ஷனுடன் கலந்த காதல் !
Komentáře