top of page

'ரெஜினா' - விமர்சனம் !

பவா செல்லதுரைஆதரவில் வாழ்ந்து வரும் சுனைனாவுக்கு வங்கி ஒன்றில் வேலைப்பார்க்கும் ஆனந்த நாக்குடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொள்கிறார்.


ஆனந்த நாக்குடன் வாழ்வில் அழகான வாழ்க்கையை அன்பான காதலுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் சுனைனா.


இந் நிலையில் ஆனந்த நாக் வேலை செய்யும் வங்கியில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் புகுந்து பணத்தை கொள்ளையடிப்பதுடன் ஆனந்த நாக்கை கொடூரமாக கொலை செய்கின்றனர் .

காதல் கணவர் ஆனந்த்நாக்கின் இழப்பு சுனைனாவை பாதிக்கிறது. தனது கணவரை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கிறார்.

ஆனால் அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாததால் தன் கணவனை கொன்றவர்களை பழி வாங்க சுனைனாவே களத்தில் இறங்கி தன் நண்பர்களின் துணையுடன் பழிதீர்க்க புதிய அவதாரம் எடுக்கிறார் .


முடிவில் தன் கணவனை கொன்றவர்களை சுனைனா கண்டுபிடித்தது எப்படி ?


பணத்தை கொள்ளையடிக்க வந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் ஆனந்த நாக்கை மட்டும் திட்டமிட்டு கொலை செய்வதற்கான காரணம் என்ன ?

என்பதை சொல்லும் படம்தான் 'ரெஜினா'


'ரெஜினா' என்ற டைட்டில் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சுனைனா,,, கதைக்கு அவசியமான காட்சிகளில் சிகரெட்டை ரவுண்டு ரவுண்டாக புகை விடும்போதும் ,, வில்லனின் மனைவியை நேசிக்கும் காட்சிகளிலும்,,கணவனை கொன்றவர்களை பழி தீர்க்கும் காட்சிகளிலும் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியாக மிக இயல்பான இவரது நடிப்பு படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.


சுனைனாவின் கணவராக வரும் ஆனந்த் நாக் குறைவான காட்சிகளில் தோன்றினாலும் ரசிகர்கள் மனதில் நிற்கிறார்


விவேக் பிரசன்னா,நிவாஸ் ஆதித்தன், ரித்து மந்த்ரா, சாய் தீனா, பவா செல்லதுரை உள்ளிட்ட அனைவரும் நடிப்பில் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.


தயாரிப்பாளர் சதீஷ் நாயரின் இசையில் பாடல்களும்

,, கதையின் வேகத்திற்கு இணையான பின்னணி இசையும் அசத்தல்!


கதைக்கு பக்க பலமாக ஒளிப்பதிவாளர் பவி கே பவனின் ஓளிப்பதிவு.


காதல் கணவனை திட்டமிட்டு கொன்றவர்களை பழி வாங்கும் நாயகியின் கதையை மையமாக கொண்டு கொரியன் பட ஸ்டைலில் விறு விறுப்பான திரில்லிங்கான திரைக்கதை அமைப்புடன் ,,,, ஆக்க்ஷனுடன் சேர்ந்த த்ரில்லர் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் டொமின் டி செல்வா.


ரேட்டிங் ; 3 / 5



ความคิดเห็น


bottom of page