MediaTalks Logo
Header Advertisement
cinema news
14 September 2023 at 19:23•6 Views

'கெழப்பய' - பட விமர்சனம் !

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
'கெழப்பய' - பட விமர்சனம் !

Casting : Kathiresakumar, Krishnakumar, Vijaya Ranadeeran, KN Rajesh, 'Bakery' Murugan, Anudiya, 'Uriyadi' Anandaraj

Directed By : Yazh Gunasekaran

Music By : Kebi

Produced By : Season Cinema - Yazh Gunasekaran

காவலாளியாக தனியார் நிறுவனத்தில் வயதான கதிரேசகுமார் பணியாற்றுகிறார்.

பணிமுடிந்து தனது சைக்கிளில் வீடு திரும்பும் போது, அவர் செல்லும் வழியில் ஒரு கார் வருகிறது.

கிராமப்புறத்தில் உள்ள சிறிய பாதை என்பதால் ஒரு வாகனம் சென்றால் மறுவாகனம் செல்ல முடியாது. எந்த வாகனம் சென்றாலும் முன் செல்பவர்கள் கொஞ்சம் ஒதுங்கினால் மட்டுமே பின்னால் வரும் வாகனங்கள் செல்ல முடியும்.

இச் சூழ்நிலையில் கர்ப்பிணி பெண்ணுடன் ஐந்து ஆண்கள் பயணிக்கும் அந்த காருக்கு வழிவிடாமல் கதிரேச குமார் செல்கிறார். அந்த காரில் உள்ள ஓட்டுனர் வழிவிடும்படி தொடர்ந்து ஹாரன் அடித்துக் கொண்டே வருகிறார்.

ஆனால் நாயகன் கதிரேசகுமார் அந்த காருக்கு வழி விடாமல் நடு ரோட்டிலேயே பயணித்து கொண்டிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் காரில் வருபவர்கள் காரை நிறுத்திவிட்டு, கீழே இறங்கி அவரிடம் வழி விட்டு செல்லுமாறு சொல்கிறார்கள். அப்போதும் வழிவிடாமல் காரை மறித்தபடி கதிரேச குமார் பயணிக்க, காரில் இருப்பவர்கள் கோபமடைந்து அவரை அடித்து துவைக்கிறார்கள்.

அடிவாங்கிய பிறகும், கதாநாயகன் கதிரேச குமார் அந்த காரை பார்த்துக் கொண்டு மீண்டும் நடுரோட்டில் தனது சைக்கிளை நிற்க வைத்துவிட்டு அங்கேயே அமர்ந்து கொண்டு கார் செல்வதற்கு வழிவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் எதற்காக அந்த காருக்கு வழிவிடாமல் கதிரேச குமார் தடுக்கிறார்?

அந்த காருக்கும் நாயகன் கதிரேச குமாருக்கும் உள்ள தொடர்பு என்ன ? என்பதை சொல்லும் படம்தான் 'கெழப்பய'

கதையின் நாயகனாக நடிக்கும் கதிரேச குமார் படம் முழுவதும் கதாபாத்திரத்துடன் இணைந்து மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .

வி ஏ ஓ வாக வரும் உறியடி ஆனந்தராஜ் ,,கிருஷ்ணகுமார் ,விஜய ரண தீரன் ,கே என் ராஜேஷ் ,பேக்கரி முருகன் ,அனுதியா என நடிப்பில் அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .

இசையமைப்பாளர் கெபியின் இசையும் , ஒளிப்பதிவாளர் அஜித்குமார் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !

கதையின் நாயகனான வயதான கதாபாத்திரத்தை வைத்து இயல்பாக நடக்கும் சாதாரண சம்பவத்தை மையமாக கொண்ட கதையாக படத்தின் முதல் பாதி விறு விறுப்பாக சுவாரஸ்யமாக செல்வதுடன் முதல் பாதியில் இருந்த திரைக்கதையின் வேகம் இரண்டாம் பாதியில் வரும் தொய்வான காட்சிகளால் சில குறைகள் இருந்தாலும் கதாபாத்திரத்துடன் இணைந்து நடித்த நடிகர்களின் நடிப்பினால் ரசிக்கும்படி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் யாழ் குணசேகரன்.

ரேட்டிங் ; 3 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: