top of page

'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் 'சூர்யா'ஸ் சாட்டர்டே' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்!!

'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் 'சூர்யா'ஸ் சாட்டர்டே' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் விவேக் ஆத்ரேயா - டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான 'சூர்யா'ஸ் சாட்டர்டே' திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சூர்யா மற்ற கிழமைகளில் தோன்றும் புதிய பரிமாணம் இடம் பிடித்திருக்கிறது.

'சூர்யா'ஸ் சாட்டர்டே' திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள்- இதுவரை வெளியிட்ட விளம்பரங்களில் சூர்யா அல்லது 'நேச்சுரல் ஸ்டார்' நானியை ஆக்ரோஷமான இளைஞனாகவே காட்சிப்படுத்தினர்.‌ ஆனால் அவர் சனிக்கிழமைகளில் மட்டுமே வன்முறையாளர். மற்ற நாட்களில் சூர்யாவின் தோற்றத்தை ரசிக்கவும், அவரது புதிய பரிமாணத்தை அனுபவிக்கவும்.. தற்போது அந்த கதாபாத்திரத்தின் செகண்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.‌ இந்த போஸ்டரில் 'நேச்சுரல் ஸ்டார்' நானி நம் பக்கத்து வீட்டு பையனின் அவதாரத்தில், வசீகரிக்கும் புன்னகையுடன் தோன்றுகிறார். மேலும் அந்தப் போஸ்டரில் அவர் பைக் ஓட்டுவது போலும் உள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிளில் சூர்யா எப்படி இருந்தார்? என்பதற்கு நேர் மாறாக அவரது இந்த தோற்றம் உள்ளது. இதன் மூலம் இந்த தனித்துவமான கதாபாத்திரம் வெவ்வேறு வகையான அடுக்குகளை கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.

இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தைப் பற்றிய புதிய தகவல்களை விரைவில் வழங்கவுள்ளார்கள்.‌

டி வி வி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் 'நேச்சுரல் ஸ்டார்' நானி, பிரியங்கா அருள் மோகன், எஸ். ஜே. சூர்யா, சாய் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முரளி . ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.

நடிகர்கள் : நானி, பிரியங்கா அருள் மோகன், எஸ். ஜே. சூர்யா, சாய் குமார் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் : விவேக் ஆத்ரேயா

தயாரிப்பாளர்கள் : டி வி வி தனய்யா & கல்யாண் தாசரி

தயாரிப்பு நிறுவனம் : டி வி வி என்டர்டெய்ன்மெண்ட்

இசை : ஜேக்ஸ் பிஜாய்

ஒளிப்பதிவு : முரளி. ஜி

படத்தொகுப்பு : கார்த்திகா ஸ்ரீனிவாஸ்

சண்டை பயிற்சி இயக்குநர் : ராம்- லக்ஷ்மன்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெட்டிங் : வால்ஸ் & ட்ரெண்ட்ஸ்- இயக்குநர் விவேக் ஆத்ரேயா - டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான 'சூர்யா'ஸ் சாட்டர்டே' திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சூர்யா மற்ற கிழமைகளில் தோன்றும் புதிய பரிமாணம் இடம் பிடித்திருக்கிறது.*

'சூர்யா'ஸ் சாட்டர்டே' திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள்- இதுவரை வெளியிட்ட விளம்பரங்களில் சூர்யா அல்லது 'நேச்சுரல் ஸ்டார்' நானியை ஆக்ரோஷமான இளைஞனாகவே காட்சிப்படுத்தினர்.‌ ஆனால் அவர் சனிக்கிழமைகளில் மட்டுமே வன்முறையாளர். மற்ற நாட்களில் சூர்யாவின் தோற்றத்தை ரசிக்கவும், அவரது புதிய பரிமாணத்தை அனுபவிக்கவும்.. தற்போது அந்த கதாபாத்திரத்தின் செகண்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.‌ இந்த போஸ்டரில் 'நேச்சுரல் ஸ்டார்' நானி நம் பக்கத்து வீட்டு பையனின் அவதாரத்தில், வசீகரிக்கும் புன்னகையுடன் தோன்றுகிறார். மேலும் அந்தப் போஸ்டரில் அவர் பைக் ஓட்டுவது போலும் உள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிளில் சூர்யா எப்படி இருந்தார்? என்பதற்கு நேர் மாறாக அவரது இந்த தோற்றம் உள்ளது. இதன் மூலம் இந்த தனித்துவமான கதாபாத்திரம் வெவ்வேறு வகையான அடுக்குகளை கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.

இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தைப் பற்றிய புதிய தகவல்களை விரைவில் வழங்கவுள்ளார்கள்.‌

டி வி வி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் 'நேச்சுரல் ஸ்டார்' நானி, பிரியங்கா அருள் மோகன், எஸ். ஜே. சூர்யா, சாய் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முரளி . ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.

நடிகர்கள் : நானி, பிரியங்கா அருள் மோகன், எஸ். ஜே. சூர்யா, சாய் குமார் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் : விவேக் ஆத்ரேயா

தயாரிப்பாளர்கள் : டி வி வி தனய்யா & கல்யாண் தாசரி

தயாரிப்பு நிறுவனம் : டி வி வி என்டர்டெய்ன்மெண்ட்

இசை : ஜேக்ஸ் பிஜாய்

ஒளிப்பதிவு : முரளி. ஜி

படத்தொகுப்பு : கார்த்திகா ஸ்ரீனிவாஸ்

சண்டை பயிற்சி இயக்குநர் : ராம்- லக்ஷ்மன்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெட்டிங் : வால்ஸ் & ட்ரெண்ட்ஸ்

Comments

bottom of page