MediaTalks Logo
Header Advertisement
reviews
29 October 2026 at 22:26•112 Views

'பனி விழும் இரவு' - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
'பனி விழும் இரவு'  - விமர்சனம்

தயாரிப்பாளர்கள் சதாமுருகன், தங்கவேல் வல்லவர்சாமி, ஓம் செல்வா தயாரிப்பில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநர் செ. ரா. ராஜேஷ் இயக்கியுள்ள திரைப்படம் 'பனி விழும் இரவு'

கொடைக்கானலில் திருமணம் செய்து கொள்ள நிச்சயிக்கப்பட்ட மண பெண்ணான நாயகி எனாக்க்ஷி கங்குலியுடன் நாயகன் அருண் கார்த்தி திருமணத்திற்கு முன்பு எடுக்கப்படும் ப்ரி வெட்டிங் ஷூட்டுக்காக இளம் ஜோடிகள் ஒரு பங்களாவுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் திடீரென எனாக்க்ஷி கங்குலி காணாமல் போக அதிர்ச்சியடையும் அருண் கார்த்தி கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன்ராஜிடம் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணான எனாக்க்ஷி கங்குலியை காணவில்லை என புகார் அளிக்கிறார் .

அருண் கார்த்தியின் புகாரின்படி கான்ஸ்டபிள் கருப்பு நம்பியாருடன் சேர்ந்து காணாமல் போன எனாக்க்ஷி கங்குலியை தேடும் முயற்சியில் தீவிரமாக இறங்குகிறார் இன்ஸ்பெக்டர் சேரன்ராஜ்.

இறுதியில் இன்ஸ்பெக்டர் சேரன்ராஜ் நாயகி எனாக்க்ஷி கங்குலியை கண்டுபிடித்தாரா ? அருண் கார்த்தி திருமணம் செய்து கொள்ள போக பெண் எனாக்க்ஷி கங்குலி என்பது உண்மையா ? முடிவில் எனாக்க்ஷி கங்குலி கிடைத்தாரா ? இல்லையா ? என்பதுதான் 'பனி விழும் இரவு' படத்தின் மீதிக்கதை

நாயகனாக நடித்திருக்கும் அருண் கார்த்தி இயல்பான நடிப்பில் காதல் ,தவிப்பு , ஏக்கம் என உடல் மொழியில் கதையுடன் இணைந்து உணர்வுபூர்வமான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார் .

நாயகியாக எனாக்க்ஷி கங்குலி அழுத்தமான கதாபா த்திரத்தில் கதைக்கேற்றபடி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கருப்பு நம்பியார்,சேரன்ராஜ்,சரவணசக்தி,செ. ரா. ராஜேஷ்,கஜராஜ்,சுருளி,உமர்,வினோத் என படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .

இப் படத்தின் பாடல்களை சதாமுருகன், சந்தோஷ் ஆறுமுகம் எழுதியுள்ளனர்.

சாதுவன் படத்தின் இசையமைப்பாளர் சதாமுருகன் இப்படத்திற்கு சிறப்பாக இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் திரு. ஜெயக்குமார் தங்கவேல் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

திருமணத்திற்கு முன் புகைப் படம் எடுக்க கொடைக்கானலுக்கு வரும் இளம் ஜோடியின் கதையை மையமாக வைத்து விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் யூகிக்க முடியாத திருப்பங்களுடன் ஆரம்பம் முதல் முடிவு வரை சுவாரஸ்யமாக கதையை நகர்த்துவதுடன் பார்வையாளர்கள் அனைவரும் ரசிக்கும்படி மர்மம் நிறைந்த சஸ்பென்ஸ் த்ரில்லராக திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் செ. ரா. ராஜேஷ்.

மொத்தத்தில் ‘பனி விழும் இரவு’ பதற்றம்

ரேட்டிங் - 3 .2 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: