MediaTalks Logo
Header Advertisement
reviews
23 October 2026 at 21:17•83 Views

‘சட்டமும் நீதியும் 2’ இணைய தொடர் விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
‘சட்டமும் நீதியும் 2’ இணைய தொடர் விமர்சனம்

சென்னையில் வழக்கறிஞர்களின் பார் கவுன்சிலின் தலைவராக இருக்கும் பெண் வழக்கறிஞரான வரலட்சுமி சரத்குமாரின் கணவர் ஆவடியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி புரியும் பிரேம்குமார் நள்ளிரவில் ஒரு இடத்தில் நடக்கும் மது விருந்தில் மர்மமான முறையில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடக்கிறார். .

பிரேம்குமாரின் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்யும் காவல்துறை, சந்தேகத்தின் பேரில் குற்றவாளிகளாக உடனிருக்கும் நான்கு போலீஸ்காரர்களை கைது செய்கிறது.

ஆனால் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் அதிகாரி பிரேம்குமாரின் மரணத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை தாங்கள் நிரபராதிகள் என மேலதிகாரிகளிடம் போராடுகின்றனர் .

இச் சூழ்நிலையில் இறந்த பிரேம்குமார் பார் கவுன்சில் தலைவர் வரலட்சுமி சரத்குமாரின் கணவர் என்பதாலும் தண்டனை வாங்கிக் கொடுப்பதில் அவர் தீவிர இருப்பதால் அந்த நான்கு போலீஸ்காரர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கை எடுத்து நடத்த எந்தவொரு வழக்கறிஞரும் முன்வர மறுக்கின்றனர் .

இந்நேரத்தில் கைது செய்யப்பட்ட போலீசில் ஒருவரான ஆறு பாலாவின் மனைவி சாதாரண வழக்கறிஞரான சரவணனனிடம் நியாயம் கேட்டு கண்ணீர் விட்டு கதறுவதால் நான்கு போலீஸ்காரர்களுக்கு ஆதரவாக வழக்கை நடத்த முன் வருகிறார்.

வழக்கறிஞரான சரவணனனின் தீவிர விசாரணையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்குமாரின் அதிகார அத்துமீறல்கள், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த பிரச்சனையான குழப்பங்கள் மேலும் மறைக்கப்பட்ட பல உண்மைகளின் பின்னணியில் சரவணனனுக்கு அதிர்ச்சியான பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது .

இறுதியில் செல்வாக்குமிக்க வழக்கறிஞர் வரலட்சுமியுடன் இந்த வழக்கில் மோதும் சரவணன், தனது திறமையான வாதத்தினால் ஆதாரங்களை நிருபித்து நான்கு போலீஸ்காரர்களும் குற்றமற்ற நிரபராதிகள் என வழக்கிலிருந்து அவர்களை காப்பாற்றினாரா? மர்மமான முறையில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்குமாரின் மரணம் கொலையா ? தற்கொலையா ? பிரேம்குமாரின் மரணம் கொலை என்றால் கொலை செய்த மர்ம நபர் யார் ? என்பதை எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக சொல்லும் இணைய தொடர்தான் ‘சட்டமும் நீதியும் 2’.

வழக்கறிஞராக நடித்திருக்கும் பருத்தி வீரன் சரவணன், அமைதியான நடிப்பில் நீதிமன்றத்தில் எதிர் தரப்பினரை வாத திறமையால் ஆதாரங்கள் மூலம் முறியடிக்கும் காட்சிகளிலும் , முடிவில் தான் செய்த தவறை எண்ணி வருந்தும் காட்சிகளிலும் அனுபவ நடிப்பில் முத்திரை பதிக்கிறார் .

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார் திறமையான வழக்கறிஞராக கணவரை கொலை செய்த குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர நீதிமன்றத்தில் வழக்கறிஞராகபோராடும்போதும் , தனது கணவர் இறந்த சோகத்தை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும்போதும் அழுத்தமான கதாபாத்திரத்தில் திறமையான நடிப்பில் பாராட்டும்படி நடித்துள்ளார் .

வரலட்சுமி சரத்குமாரின் கணவராக நடித்திருக்கும் பிரேம்குமார், சரவணனின் ஜூனியராக நடித்திருக்கும் லாவண்யா, குற்றவாளி போலீஸ்காரர்களாக நடித்திருக்கும் கவிதா பாரதி, ஆறு பாலா, கல்லூரி வினோத், பீட்டர் ஜே. சந்திரன், ஷிவின், பருல் சம்பரியா, பவன், அக்ஷயா வி, பிரியங்கா ரோபோசங்கர், அபர்ணா சுந்தர்ராமன் என நடித்த அனைவரும் நடிப்பில் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர் .

எஸ்.கோகுலகிருஷ்ணனின் ஒளிப்பதிவும் ,விபின் பாஸ்கரின் பாடல்களுடன் பின்னணி இசையும் தொடருக்கு பக்க பலமாக இருக்கிறது .

நள்ளிரவில் மர்மமாக நடக்கும் ஒரு கொலையின் கதையை மையமாக வைத்து , யூகிக்க முடியாதபடி எதிர்பாராத திருப்பங்களுடன் நீதிமன்ற காட்சிகளை விறு விறுப்பான திரைக்கதையில் அமைத்ததுடன் இது கொலையா அல்லது தற்கொலையா என தொடரை பார்க்கும் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து சுவாரஸ்யமான தொடராக இயக்கியுள்ளார் இயக்குநர் பாலாஜி செல்வராஜ்.

மொத்தத்தில், ‘சட்டமும் நீதியும் 2’ - பரப்பரப்பு

ரேட்டிங் 3.5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: