‘ஜெயிலர் 2’.- விமர்சனம்

சிலை கடத்தல் கும்பலில் ஒருவரான விநாயகனை கொல்வதுடன் அவரூடன் தொடர்பு வைத்திருந்த தனது மகனான வசந்த் ரவியை ரஜினிகாந்த் சுட்டுக் கொல்வதுடன் ‘ஜெயிலர்’ படம் முடிவடையும். ‘ஜெயிலர்’ முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக வன்முறை இல்லாத வாழ்க்கையை விட்டு விலகி ஒரு மலைக் கிராமத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் சாதாரண சூப்பர்வைசராக அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் சிலை கடத்தல் கும்பலின் தலைவனான எஸ்.ஜே.சூர்யாவின் முழு நெட்வொர்க்கையும், அவருடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் அழிக்க முடிவு செய்து அதற்கான அதிரடியான பயணத்தில் அமைதியாய் களத்தில் இறங்கும் படம்தான் ‘ஜெயிலர் 2’.
நாயகனாக நடித்திருக்கும் ரஜினிகாந்த் மாஸ் ஸ்டைலால் கம்பீரமான உடல் மொழியில் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியானப் பேச்சில் அளவான நடிப்பில் ரசிகர்களின் முழு கவனத்தையும் ஈர்த்து ஒவ்வொரு அசைவுகளில் தனது வழக்கமான பாணியில் வசனங்கள் முலம் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் சுராஜ் வெஞ்சரமூடு, தனது மிரட்டலான நடிப்பில் காமெடியுடன் திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.
யோகி பாபு மற்றும் நமோ நாராயணன் கூட்டணி காமெடி காட்சிகள் வயிறு வலிக்க சிரிக்கும்படி திரையரங்கையே அதிர வைக்கிறது.
எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்கரவர்த்தி, வித்யா பாலன் ,ரம்யா கிருஷ்ணன், மிர்னா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனுபவ நடிப்பில் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் காட்சிகளை கலர்புல்லாகவும், பிரமாண்டமாகவும் படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.
அனிருத் ரவிச்சந்திரன் இசையில் பாடல்கள் அனைத்தும் துள்ளல் ரகம். பின்னணி இசை திரைக்கதையின் வேகத்திற்கு இணையாக இருக்கிறது .
சிலை கடத்தல் கும்பலை வேரோடு களையெடுக்க முடிவு செய்யும் நாயகனின் கதையை மையமாக வைத்து ஆரம்பம் முதல் இறுதி வரை மாஸ், பிரமாண்டம், ஆக்ஷன், நகைச்சுவை என அனைத்து அம்சங்களுடன் திரைக்கதை அமைத்து சிறிது கூட காட்சிகளில் தொய்வின்றி வேகமாகவும், விறுவிறுப்பாகவும் கதையை நகர்த்துவதுடன் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் முழுமையான பொழுதுபோக்குப் படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் நெல்சன் .
மொத்தத்தில், ‘ஜெயிலர் 2’ அட்டகாசமான ஆக்ஷனுடன் ரசிகர்களுக்கு அதிரடி விருந்து.
ரேட்டிங் 3 . 5 / 5

