MediaTalks Logo
Header Advertisement
reviews
27 November 2026 at 15:38•185 Views

‘மெளன மொழிகள்’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
 ‘மெளன மொழிகள்’ - விமர்சனம்

ரீவாரி என்டர்டெயின்மென்ட் (Sri Vaari Entertainment) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.பி. பாலச்சந்திரன் மற்றும் பி. ஸ்ரீமன் தயாரிப்பில், இயக்குநர் ஏ.சி. சௌந்தர் இயக்கத்தில், பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் மகன் ஷாகிர் மனோ கதாநாயகனாகவும், அர்ச்சனா கதாநாயகியாகவும் நடித்துள்ள திரைப்படம் ‘மௌன மொழிகள்’

தலை வாசல் விஜய்யின் மகனான நாயகன் ஷகீர் மனோ நண்பனான அர்ஜுனுடன் இணைந்து விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் .

தனது விளம்பரத் துறை நிறுவனத்தின் சார்பில் எடுக்கப்படும் விளம்பரப் படங்களில் நடிக்க அர்ஜுனுடன் சேர்ந்து புதிய மாடல் பெண்களை தேடும்போது கல்லூரியில் படிக்கும் பெண்ணான அர்ச்சனாவை ஷகீர் மனோ சந்திக்கும்போது இருவருக்கும் வாக்கு வாதமாகி பிரச்சனையாகிறது .

இந்த நிலையில் கல்லூரியில் நடைபெறும் ‘மிஸ் சென்னை’ அழகிப் போட்டியில் ‘மிஸ் சென்னை’ யாக வெற்றி பெறும் அர்ச்சனாவை தனது குளியல் சோப்பு விளம்பரப் படத்தில் நாயகியாக நடிப்பதற்கு மீண்டும் சந்திக்க இருவருக்கும் கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன.

இச் சூழ்நிலையில் எதிர்பாராத ஒரு விபத்தில் அர்ச்சனாவின் முகத்தில் சில காயங்கள் ஏற்பட்டு தழும்புகள் உருவாகிறது .

இதனால் அதிர்ச்சியில் மனமுடைந்த அர்ச்சனா முகத்திரை போட்டுக் கொண்டு கல்லூரி முதல் அனைத்து இடங்களுக்கும் செல்கிறார் .

இதனை அறியாத நாயகன் ஷகீர் மனோ, ஒரு டைரியின் மூலம் யாரென்று தெரியாத நாயகி அர்ச்சனா தான் தனது மனதுக்கு பிடித்தவர் என்பதை முடிவு செய்து அர்ச்சனாவை பார்க்காமலே காதலிப்பதுடன் திருமணம் செய்து கொள்ள அவரை தேடுகிறார் .

அதே சமயம் அவருக்கு உதவி செய்ய வரும் திவ்யா ஷகீர் மனோவின் நல்ல குணங்களால் அவரை காதலிக்க தொடங்குகிறார்.

இந்நேரத்தில் ஷகீர் மனோவும் ,அர்ச்சனாவும் சந்திக்கும் ஒரு சந்தர்ப்பம் உருவாக மனப்பூர்வமாக அர்ச்சனாவிடம் தன் காதலை ஷகீர் மனோ தெரிவிக்க அர்ச்சனாவும் அவரது காதலை ஏற்று கொள்ள பெரியவர்கள் நிச்சயித்தபடி திருமண ஏற்பாடுகள் நடக்கிறது .

காதலர்கள் சந்தோசத்துடன் தங்கள் திருமண நாளை எதிர் நோக்கி காத்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத அதிர்ச்சி தரும் சம்பவம் ஓன்று நடக்கிறது .

இறுதியில் ஷகீர் மனோ-அர்ச்சனாவின் திருமணம் எதிர்பார்த்தபடி விமரிசையாக நடைப்பெற்றதா ? யாரும் எதிர்பாராத அதிர்ச்சி தரும் சம்பவத்தில் நடந்தது என்ன ? என்பது தான் ‘மெளன மொழிகள்’ படத்தின் மீதி கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஷகீர் மனோ இளமை துள்ளலான நடிப்பில் காமெடி, காதல், ஆக்ஷன் என அனைத்து உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தி சிறப்பான நடிப்பில் நடித்திருக்கிறார் .

நாயகியாக நடித்திருக்கும் அர்ச்சனா அழுத்தமான கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பில் அழகாக நடித்துள்ளார் .

வில்லத்தனமான நடிப்பில் மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் திவ்யா .

மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் பி.ஸ்ரீமன்,நாயகனின் நண்பராக நடித்திருக்கும் அர்ஜுன், டீ கடை நாயராக நடித்திருக்கும் விஜய் கணேஷ் நாயகனின் பெற்றோர்களாக நடித்திருக்கும் தலைவாசல் விஜய் மற்றும் மீரா கிருஷ்ணன், நாயகியின் பெற்றோர்களாக நடித்திருக்கும் இளவரசன் மற்றும் அஞ்சலி தேவி என நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் .

நல. இளந்திரையன் இசையும் ,ஒளிப்பதிவாளர் எம்.ஜி.ராயின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .

உணர்வுபூர்வமான காதல் கதையை மையமாக வைத்து காதலில் அன்பின் ஆழத்தை திரைக்கதையில் அழுத்தமாக சொல்வதுடன் எதிர்பாராத திருப்பமான கிளைமாக்ஸுடன் மனதை கலங்க வைக்கும் காதல் படமாக எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் ஏ.சி.சௌந்தர். M.A.,

மொத்தத்தில், ‘மெளன மொழிகள்’ ‘மெளனமான காதல்

மதிப்பீடு - 2. 5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: