MediaTalks Logo
Header Advertisement
cinema news
27 November 2026 at 22:39•59 Views

தமிழ் ரசிகர்களுக்காக மலையாளத் திரைப்படங்களை தமிழ் மொழியில் வெளியிட்டு வரும் மனோரமாமேக்ஸ் ஓடிடி தளம் !

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
தமிழ் ரசிகர்களுக்காக மலையாளத் திரைப்படங்களை தமிழ் மொழியில் வெளியிட்டு வரும் மனோரமாமேக்ஸ் ஓடிடி தளம் !

கேரளாவைச் சேர்ந்த முன்னணி ஓடிடி தளமான மனோரமாமேக்ஸ், தமிழ் ரசிகர்களைக் கவரும் வகையில் தனது மலையாளத் திரைப்படங்களை தமிழ் மொழியில் வெளியிட்டு வருகிறது. நகைச்சுவை, குடும்ப உணர்வுகள், ஆக்‌ஷன், த்ரில்லர் எனப் பல்வேறு ஜானர்களில் உள்ள திரைப்படங்களைத் தமிழ் மொழியில் வெளியிட்டு, மலையாளத் திரையுலகின் சிறந்த படைப்புகளைத் தமிழ் ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்கிறது.

தற்போது மனோரமாமேக்ஸ் தளத்தில் தமிழில் பார்க்கக் கிடைக்கும் மலையாளத் திரைப்படங்களின் பட்டியலில் ‘பல்லொட்டி’, ‘பைங்கிளி’, ‘தி தர்ட் மர்டர்’, ‘மிஸ்டர் & மிஸஸ் பேச்சுலர்’, ‘கட்டாலன்’ மற்றும் ‘இட்ஸ் அ மெடிகல் மிராக்கிள்’ ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வரிசையில் ’Her’ திரைப்படம் இந்த வார இறுதியில் தமிழில் வெளியாகவுள்ளது.

வித்தியாசமான கதைக்களங்களையும், சிறந்த நடிகர்களையும் கொண்ட இந்தப் படங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான திரையனுபவத்தை வழங்குகின்றன. ‘பல்லொட்டி’, ‘பைங்கிளி’ ஆகிய படங்கள் நகைச்சுவையுடன் உணர்வுபூர்வமான கதையையும் கொண்டிருக்க, ‘தி தர்ட் மர்டர்’ திரைப்படம் பரபரப்பான த்ரில்லர் அனுபவத்தைத் தருகிறது. ‘மிஸ்டர் & மிஸஸ் பேச்சுலர்’ நகைச்சுவை விருந்தாக அமைய, ‘கட்டாலன்’ ஆக்‌ஷன் ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்ட நகைச்சுவை கலந்த த்ரில்லர் அனுபவத்தை ‘இட்ஸ் அ மெடிகல் மிராக்கிள்’ தருகிறது. இந்த வரிசையில் புதிதாக இணையவுள்ள ‘Her’ திரைப்படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Image
Image

ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 20,000 மணி நேரத்திற்கும் அதிகமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் கொண்டுள்ள மனோரமாமேக்ஸ் தளத்தில், திரைப்படங்கள் மட்டுமின்றி மழவில் மனோரமா மற்றும் மனோரமா நியூஸ் தொலைக்காட்சிகளின் பிரபல நிகழ்ச்சிகளையும் கண்டு ரசிக்கலாம். பல்வேறு மொழிகளில் உள்ளடக்கங்களை வழங்குவதன் மூலம், மொழி வேறுபாடுகளைக் கடந்து தரமான பொழுதுபோக்கை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் கொண்டு சேர்ப்பதில் இத்தளம் கவனம் செலுத்தி வருகிறது.

தமிழில் மலையாளத் திரைப்படங்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகரித்து வரும் மனோரமாமேக்ஸ், புதிய திரைப்படங்களையும் பல்வேறு ஜானர்களிலான படைப்புகளையும் தனது தளத்தில் இணைத்து, தமிழ் ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு அனுபவத்தை மேலும் விரிவுபடுத்தி வருகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: