MediaTalks Logo
Header Advertisement
reviews
27 November 2026 at 14:11•81 Views

‘சிக்னல் அட் 11:30’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
‘சிக்னல் அட் 11:30’ - விமர்சனம்

மலர்விழி நடேசன் எழுத்து இயக்கத்தில், டி. இமான் இசையமைப்பில், அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்ரமணி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘சிக்னல் அட் 11:30’.

கார்ப்பரேட் நிறு​வனத்தின் சேர்மனான தொழிலதிபர் சந்தோஷ் பிரதாப் இரவு நேரத்தில் தன் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு காரில் சென்றுக்கொண்டிருக்கிறார்.

செல்லும் வழியில் சரியாக இரவு 11:30 மணியளவில் சிக்னல் ஒன்றில் நிற்கும் போது, இரு சக்கர வாகனத்தில் செல்லும் ஒரு பெண்ணை சில இளைஞர்கள் துரத்தி செல்கிறார்கள்.

அதிர்ச்சியடையும் சந்தோஷ் பிரதாப் இரு சக்கர வாகனங்களை பின் தொடர்ந்து சாலை ஓரத்தில் விழுந்து கிடக்கும் அந்த பெண் பயணித்த இரு சக்கர வாகனத்தை பார்த்து அந்த பெண் எங்கும் இல்லாததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்.

மற்றொரு பக்கம் மீடியாவில் பணி புரியும் பவ்யா திரிகா இரவில் வீட்டுக்கு வராததால் அவரது தந்தை ஜெயப்பிரகாஷ் பதட்டத்தில் பவ்யா திரிகாவுடன் வேலை செய்யும் முனீஸ் காந்தை தொடர்பு கொள்கிறார் .

மறு நாள் ஜெயப்பிரகாஷ் தன் மகளை காணவில்லை என போலீசில் புகார் அளிக்கிறார் .

தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு காணாமல் போன பவ்யா ட்ரிகாவை கண்டுபிடிக்க முயற்சி செய்யும் போது சந்தோஷ் பிரதாப் பவ்யா ட்ரிகாவை கடத்தி அவரது வீட்டில் அடைத்து வைத்திருக்கிறார் .

இந்த நிலையில் சந்தோஷ் பிரதாப்பிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் பவ்யா ட்ரிகாவிடம் தனது கார்ப்பரேட் நிறுவனத்தை பற்றியும் , மருத்துவரான புஜிதா பொன்னடாவுக்கும் தனக்கும் இடையே மலர்ந்த காதலுடன் திருமணமான பின் கர்ப்பமாக இருக்கும் புஜிதா பொன்னடாவை சில இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் துரத்தி கொல்லப்பட்டதை போல உங்களுக்கு நடந்து விடும் என்கிற பயத்தில் உங்களை மயக்க நிலையில் இங்கு கொண்டு வந்தேன் என சொல்கிறார் .

இறுதியில் போலீசார் பவ்யா ட்ரிகாவை கண்டுபிடித்தார்களா? சந்தோஷ் பிரதாப் வீட்டில் அவரது கட்டுப்பாட்டில் அடைத்து வைத்தது பவ்யா ட்ரிகாவைதானா ? முடிவில் சந்தோஷ் பிரதாப்பின் உண்மையான பின்னணி என்ன ? என்பதை எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக சொல்லும் படம் ‘சிக்னல் அட் 11.30’.

நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப் அழுத்தமான கதாப்பாத்திரத்தில் காதல் , பயம் ,பதட்டம் , தவிப்பு என அனைத்து உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தி உணர்ச்சிப்பூர்வமான நடிப்பில் மிக சிறப்பாக நடித்து பாராட்டு பெறுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் புஜிதா பொன்னடா இயல்பான நடிப்பில் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்கிறார் .

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் பவ்யா ட்ரிகா நடிப்பில் திரைக்கதைக்கு பக்க பலமாக இருக்கிறார் .

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஆர்யன் , நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், முனிஷ்காந்த் என படத்தில் நடித்த அனைவரும் நடிப்பில் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளனர் .

டி.இமானின் இசையும் , ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம்.

இளம் தொழிலதிபரான நாயகனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து மர்மம் நிறைந்த திரில்லரான கதைக் களத்தில் ஆரம்பம் முதல் முடிவு வரை காட்சிகளில் ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி சுவாரஸ்யமான அழுத்தமான திரைக்கதை அமைப்பில் யாரும் யூகிக்க முடியாத எதிர்பாராத திருப்பங்களுடன் உணர்வுபூர்வமான காதல் படமாக திரைப்படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார் இயக்குநர் மலர்விழி நடேசன்

‘சிக்னல் அட் 11.30’ ரசிக்க வைக்கும் உன்னத படைப்பு

மதிப்பீடு 3.5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: