MediaTalks Logo
Header Advertisement
reviews
26 November 2026 at 23:12•101 Views

‘நிறம்‘ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
 ‘நிறம்‘ - விமர்சனம்

K Square Cinemas தயாரிப்பில், கே. பிந்து மாதவி தயாரித்து, பலராம் கிருஷ்ணா இயக்கியுள்ள திரைப்படம் ‘நிறம்’.

மருத்துவர் சுரேகா வாணி சேர்மனாக இருக்கும் மருத்துவமனையில் நிதின் சத்யா மருத்துவராக பணி புரிகிறார் .

இந்நிலையில் மருத்துவ படிப்பு படிக்கும் மருத்துவ மாணவர்களான முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ரானி இருவரும் காதலித்து வருகின்றனர்.

துணிச்சல் மிக்க தைரியமான பெண்ணான ப்ரீத்தி அஸ்ரானி சமூகத்தில் நடக்கும் அநீதிகளைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்துகிறார் .

இதே சமயம் மருத்துவமனையில் ஒரு சிறுமி தவறான சிகிச்சையினால் உயிரிழந்த சம்பவம் தொடர்பான உண்மையை வீடியோவாக வெளியிட்ட பிறகு அவர் திடீரென ப்ரீத்தி அஸ்ரானி காணாமல் போகிறார்.

ப்ரீத்தி அஸ்ரானி காணாமல் போனதை தொடர்ந்து மருத்துவர் சுரேகா வாணியின் மகளான தான்யா ஹோப்பும் காணாமல் போகிறார் .

ப்ரீத்தி அஸ்ரானியின் பெற்றோர் போலீசில் தன் மகள் காணாமல் போனதை புகாரளிக்க போலீசாரும் மற்றொரு பக்கம் தனது விசாரணையை தொடங்குகின்றனர் .

ஒரு கட்டத்தில் நிதின் சத்யாவின் அடியாளான அன்பு மயில்சாமியின் மகளை முகேன் ராவ் காப்பாற்றுவதால் ப்ரீத்தி அஸ்ரானியைத் தேடும் முயற்சியில் முகேன் ராவுக்கு உதவியாக இருக்கிறார் அன்பு மயில்சாமி.

தீவிர தேடுதலில் ஈடுபடும் முகேன் ராவ் மருத்துவர் நிதின் சத்யா செய்யும் சட்ட விரோத செயல்களையும் அவருக்கு ஆதரவாக அரசியல் பெரும் புள்ளி கஜராஜ் இருப்பதையும் கண்டுபிடிக்கிறார் .

இறுதியில் முகேன் ராவ் ப்ரீத்தி அஸ்ரானியை கண்டுபிடித்து எதிரிகளிடம் இருந்து காப்பாற்றினாரா ? ப்ரீத்தி அஸ்ராணியை கடத்திய மர்ம நபர் யார் ? என்ன காரணத்திற்காக ப்ரீத்தி அஸ்ராணியை மர்ம நபர் கடத்தினான் ? என்பதே ‘நிறம் ‘படத்தின் மீதி கதை .

நாயகனாக நடித்திருக்கும் முகேன் ராவ் இயல்பான நடிப்பில் காதல் , நடனம் , ஆக்ஷன் என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .

நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ரானி அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடிப்பில் திரைக்கதைக்கு பக்க பலமாக இருக்கிறார் .

மற்றொரு நாயகியான தான்யா ஹோப் அளவான நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார் .

நிதின் சத்யா ,சுரேகா வாணி, கஜராஜ் ,ஸ்ரீஜித் ரவி ,அன்பு மயில்சாமி ,சினேஹா குப்தா என நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் .

இசையமைப்பாளர் D இமானின் இசையில் பாடல்கள் ரசிக்கும் ரகம் . பின்னணி இசை அசத்தல் .

சாண்டானியோ டெர்சியோவின் ஒளிப்பதிவு காட்சிகளை நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளது.

மருத்துவத்துறை பின்னணியில் நடக்கும் சட்ட விரோத செயல்களுடன் சமூக அநீதிகளுக்கு எதிராக பெண்களுக்கு எதிரான குற்றங்களை மையமாக கொண்ட கதையுடன் காதல், ஆக்ஷன், சஸ்பென்ஸ் என அனைத்தையும் கலந்த திரைக்கதை அமைப்பில் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பலராம் கிருஷ்ணா .

மொத்தத்தில் - ‘நிறம்‘ பரபரப்பான கிரைம் திரில்லர்

ரேட்டிங் - 3 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: