MediaTalks Logo
Header Advertisement
reviews
21 November 2026 at 21:45•109 Views

'ஆகாயத்தில் ஒரு தாரகை' (AOT) - விமர்சனம் ( 4 / 5 )

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
'ஆகாயத்தில் ஒரு தாரகை' (AOT) - விமர்சனம் ( 4 / 5 )

கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா நிறுவனங்கள் சார்பில் லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் தயாரிப்பில் துல்கர் சல்மான் நடிப்பில், இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் 'ஆகாயத்தில் ஒரு தாரகை' (AOT)

பள்ளி பருவம் முதல் விண்வெளி ஆராய்ச்சியாளர் ஆக ஆசைப்படும் சாத்விகா வீரவல்லி படிப்பில் திறமையான மாணவியாக இருந்தும் 10ம் வகுப்பு முடித்ததும் பெற்றோர் நிச்சயித்த மாப்பிளையான நாயகன் துல்கர் சல்மானுக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.

திருமணத்திற்கு பிறகு சாத்விகா வீரவல்லி 10ம் வகுப்பில் மாவட்டத்தில் முதல் மாணவியாக வந்ததை தெரிந்து கொள்ளும் கணவர் துல்கர் சல்மான் சாத்விகா வீரவல்லியின் விண்வெளி கனவுக்காக தொடர்ந்து படிக்க வைப்பதோடு, அவரது கனவை நிஜமாக்க அதற்கான பயணத்தை தொடர்கிறார்.

இறுதியில் மனைவி சாத்விகா வீரவல்லியின் விண்வெளிப் பயணம் கணவர் துல்கர் சல்மானின் முயற்சியில் வெற்றி பெற்றதா ? இல்லையா ? என்பதே ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ (AOT) படத்தின் மீதி கதை .

நாயகன் துல்கர் சல்மான் தனது கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டு அழகான அமைதியான நடிப்பில் ரசிகர்களின் பாராட்டை பெறுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை சாத்விகா வீரவல்லி, தன் கனவு, ஆசை, எதிர்பார்ப்பு, பயம் ,தவிப்பு என அனைத்து உணர்வுகளையும் உள்வாங்கி உணர்வுபூர்வமான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

ஸ்ருதி ஹாசன், ருஹானி ஷர்மா, நாசர், கெளதம் வாசுதேவ் மேனன், முரளி ஷர்மா, ஸ்வாசிகா, கோட்டா ஜெயராம், மானசி சுதிர், சின்னி ஜெயந்த், பிரவின், காசி ரெட்டி, சைதன்யா ஜொன்னலகட்டா உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் நடிப்பில் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளனர் ..

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையும் , ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம் .

தன் லட்சிய கனவை தனது கணவனின் துணையுடன் நிஜமாக்கும் ஒரு சாதனை பெண்ணின் கதையை மையமாக வைத்து பெண் கல்வியின் முக்கியத்துவத்துடன் பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் விறு விறுப்புடன் அழுத்தமான திரைக்கதை அமைப்பில் ரசிகர்கள் அனைவரும் பாராட்டும் விதத்தில் இந்திய அளவில் அனைத்து விருதுகளும் பெறும் சிறந்த படைப்பாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பவன் சதினேனி.

மொத்தத்தில், ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ சாதனை படைக்க இருக்கும் மாணவிகளுக்கு ஒரு பாடம் .

ரேட்டிங் 4 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: