MediaTalks Logo
Header Advertisement
reviews
14 November 2026 at 22:52•109 Views

‘கோந்தல்’ - விமர்சனம் (4 .5 / 5)

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
 ‘கோந்தல்’ - விமர்சனம்  (4 .5 / 5)

ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் பரிந்துரையாக, சந்தோஷ் தாவாகர் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில், சைக்கலாஜிக்கல் த்ரில்லர் கதையாக இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய ஏழு மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோந்தல்’

1970ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், மகாராஷ்டிரா மாநில கிராமத்தில் கிராம தலைவரான சுரேஷ் விஸ்வகர்மா அதிகாரத்துடன் கிராம மக்களை அடக்கி தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் .

அவரது மகனான நிஷாத் போஹிர் நாயகி இஷிதா தேஷ்முக் அழகில் மயங்கி அவரை திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார் .

மற்றொரு பக்கம் நாயகி இஷிதா தேஷ்முக் அனுஜ் பிரபுவை காதலிக்கிறார் .

இந்நிலையில் நாயகி இஷிதா தேஷ்முக்கின் பெற்றோர்கள் கிராமத்தின் சின்ன தலைவரின் மகனான நாயகன் யோகேஷ் சோஹோனியை திருமணம் செய்து வைக்க முடிவு செய்யும் நிலையில் , கிராம மக்கள் , உறவினர்கள் முன்னிலையில் இஷிதா தேஷ்முக்கிற்கு யோகேஷ் சோஹோனியுடன் விருப்பமில்லாத கட்டாய திருமணமாக நடைபெறுகிறது .

திருமணம் முடிந்தவுடன் மாப்பிள்ளை வீட்டில் கிராம மக்களின் தெய்வமான காந்தராயாவை நினைத்து கைலாஷ் வாக்ஹ்மாரேவின் குழுவின் பாடலோடு இரவு முழுவதும் நடைபெறும் கோந்தல் சடங்கில் உறவினர்கள் அனைவரும் கலந்து கொள்ள கிராம தலைவர் உள்ளிட்ட பொது மக்களும் பங்கேற்கிறார்கள்.

இரவில் விடிய விடிய நடக்கும் கோந்தல் சடங்கின் போது, இஷிதா தேஷ்முக் மீது ஆசைப்படும், நிஷாத் போஹிர் தனிமையில் அவரது விருப்பத்துடன் அவரை அடைய நினைக்கிறார்.

இந்நேரத்தில் இஷிதா தேஷ்முக்கின் காதலன் அனுஜ் பிரபு திருநங்கையாக வேடமிட்டு தெருக்கூத்து கலைஞராக கோந்தல் சடங்கில் கலந்து கொள்கிறார் .

இந்த சூழ்நிலையில் இஷிதா தேஷ்முக் விருப்பமில்லாத திருமண மாப்பிள்ளையான யோகேஷ் சோஹோனியை நிஷாத் போஹிரை வைத்து தீர்த்து கட்ட திட்டமிடுகிறார் .

அதே நேரத்தில் யோகேஷ் சோஹோனியை நிஷாத் போஹிர் கொலை செய்தவுடன் இஷிதா தேஷ்முக் தன் காதலனான அனுஜ் பிரபுவுடன் ஊரை விட்டு வெளியேறவும் திட்டமிடுகிறார்.

இறுதியில் நாயகி இஷிதா தேஷ்முக் திட்டப்படி கிராம தலைவரின் மகன் நிஷாத் போஹிர் யோகேஷ் சோஹோனியை கொலை செய்தாரா ?

இஷிதா தேஷ்முக் தன் காதலனான அனுஜ் பிரபுவுடன் ஊரை விட்டு சென்றாரா ? முடிவில் நடந்த மர்ம சம்பவங்கள் என்ன ? என்பதை கிராமத்தின் கலாச்சார பாரம்பரிய பின்னணியில் உருவாக்கப்பட்ட படம்தான் ‘கோந்தல்’

நாயகனாக நடித்திருக்கும் யோகேஷ் சோஹோனி அமைதியான முகத்தில் அப்பாவி குணம் ,, இரக்கம் , மனைவி மீது ஆசை , கோபம் என எதிர்பாராத திருப்பமான இறுதிக் காட்சியில் பாராட்டுக்குரிய நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார் ..

நாயகியாக நடித்திருக்கும் இஷிதா தேஷ்முக், கண்களால் மயக்கும் அழகியாக காதல் உணர்வுடன் பேசும் வசனங்களிலும் , காதலனை நினைத்து ஏங்கும் காட்சிகளிலும் , நாயகனை கொல்ல திட்டமிடும் வில்லத்தனமான காட்சிகளிலும் திறமையான நடிப்பில் ரசிகர்களின் பாராட்டை பெறுகிறார் .

பிவாபா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிஷோர் கடம்,கிராம தலைவரின் மகனாக நடித்திருக்கும் நிஷாத் போஹிர், நாயகியின் காதலராக தெருக்கூத்து கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனுஜ் பிரபு, ஊர் தலைவராக நடித்திருக்கும் சுரேஷ் விஸ்வகர்மா, தெருக்கூத்து பாடகராக நடித்திருக்கும் வாக்ஹ்மாரே என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .

இளையராஜாவின் இசையில் மனதை வருடும் ரகமாக மென்மையான பாடலோடு மராட்டிய கிராமத்தின் பாரம்பரிய தெருக்கூத்து கலையின் பாடல்களுடன் , கிராமியப் பின்னணியில் உணர்வுகளை வெளிப்படுத்தும் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் .

ஒளிப்பதிவாளர் அமலேந்து சௌத்ரியின் திறமையான ஒளிப்பதிவில் மின்சார வசதியில்லாத 1970ஆம் ஆண்டு காலக்கட்டத்தை இயல்பான காட்சிகளால் காட்சிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

திருமண விழாவின் இரவில் கடவுளுக்காக நடக்கும் சடங்கை மையமாக கொண்ட கதையுடன் கிராமத்து பின்னணியில் மக்களின் இயல்பான வாழ்வியல், கலாச்சார பண்பாடு, மர்மமான சம்பவங்கள் , சூழ்ச்சியான வஞ்சக திட்டம் என அனைத்தும் கலந்து ஆரம்பம் முதல் முடிவு வரை எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக கதையை நகர்த்தி விறு விறுப்பாக அழுத்தமான திரைக்கதை அமைப்பில் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் சைக்கலாஜிக்கல் கிரைம் த்ரில்லர் படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சந்தோஷ் தாவகார்

மொத்தத்தில் , ‘கோந்தல்’ ஆக சிறந்த படைப்பு

ரேட்டிங் 4 .5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: