MediaTalks Logo
Header Advertisement
reviews
14 November 2026 at 23:43•24 Views

‘டைட்டானிக்’ - விமர்சனம் ( 3.5 / 5 )

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
 ‘டைட்டானிக்’ - விமர்சனம்   ( 3.5 / 5 )

Thirukumaran Entertainment சார்பாக C.V.குமாரின் தயாரிப்பில் இயக்குநர் எம்.ஜானகிராமன் இயக்கியுள்ள திரைப்படம் ‘டைட்டானிக்’.

சென்னையில் பணிபுரியும் ராகவ் விஜய், நிச்சயிக்கப்பட்ட தனது திருமணத்திற்கு சென்னையில் இருந்து ரயில் மூலம் பெங்களூர் செல்கிறார்.

கோயம்புத்தூரில் வாழும் காளி வெங்கட் சண்டை போட்டு அம்மா வீட்டுக்கு சென்ற தனது மனைவியான மதுமிதாவை அழைத்து வருவதற்காக அதே ரயிலில் பயணிக்கிறார்.

சில வருடங்களாக தன்னைவிட்டு பிரிந்த காதலியான நாயகி கயல் ஆனந்தியை தேடி செல்லும் கலையரசனும் அதே ரயிலில் பெங்களூர் பயணிக்கிறார்.

ஓடும் ரயிலில் இவர்கள் மூன்று பேரும் நண்பர்களாகி, தங்களின் கடந்த கால காதல் கதைகளை சுவாரஸ்யமாக பகிர்ந்துக் கொள்கிறார்கள்.

கோயம்புத்தூரில் பள்ளி பருவத்தில் காளி வெங்கட்டின் காதல், கொடைக்கானலில் கலையரசனின் கல்லூரி காதல், ராகவ் விஜய்க்கு ஆஷ்னா சாவேரியின் அலுவலக காதல் என வெவ்வேறு காலக்கட்டங்களில் நடந்த மூன்று பேரின் காதலும் புரிதல் இல்லாமல் கவுந்து போகிறது.

அதன் பிறகு மூன்று பேரின் வாழ்க்கையில் என்ன நடந்தது ? எதிர்பார்க்காத திருப்பங்களுடன் காமெடியாகவும், காதல் உணர்வோடும் சொல்லும் படம்தான் ‘டைட்டானிக்’.

கலையரசன், காளி வெங்கட் மற்றும் ராகவ் விஜய் மூன்று பேரும் ரயிலில் நண்பர்களாக தங்களது இயல்பான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்

நாயகியாக நடித்திருக்கும் கயல் ஆனந்தி இயல்பான உடல்மொழியில் பள்ளி பருவம் , கல்லூரியில் படிக்கும் மாணவி , காதலருடன் ஏற்படும் சின்னச் சின்ன ஈகோ மோதல்களில் கோபம், ஏக்கம் என மாறுபட்ட உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார் .

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் ஆஷ்னா சாவேரி தனது துடிப்பான நடிப்பால் ரசிக்க வைக்கிறார்.

மதுமிதா, சேத்தன், தேவதர்ஷினி, சு.செந்தில் குமார், சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இயக்குநர் பாலாஜி மோகன், காயத்ரி உள்ளிட்ட அனைவரும் திரைக்கதைக்கு பக்க பலமாக நடிப்பில் பயணித்திருக்கிறார்கள்.

நிவாஸ் கே.பிரசன்னா இசையும் ,ஒளிப்பதிவாளர் பல்லுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .

ரயிலில் பயணித்து கொண்டிருக்கும் மூன்று பேரின் இயல்பான காதல் கதைகளை மையமாக கொண்ட கதையுடன் காதல் மற்றும் காதலுக்குப் பின் வாழ்க்கை , புரிதல் இல்லா காதலர்களின் ஈகோத்தனம் என ரசிக்க வைக்கும் வசனங்களுடன் ஆரம்பம் முதல் முடிவு வரை எதிர்பாராத திருப்பங்களோடு சுவாரஸ்யமாக கதையை நகர்த்துவதுடன் விறு விறுப்பாக அழுத்தமான திரைக்கதை அமைப்பில் ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும்படி காதலர்களின் படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் எம்.ஜானகிராமன்

மொத்தத்தில், ‘டைட்டானிக்’ ரசிக்க வைக்கும் காதல்

ரேட்டிங் 3.5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: