'ஓம்' விமர்சனம் (3.5 / 5)

ஆந்திர மாநிலத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள செம்மர கடத்தலை தடுக்க உடனடி நடவடிக்கையாக சிறப்பு புலனாய்வு அதிகாரியான சாய் பல்லவி தலைமையில் சிறப்பு படை அமைத்து கடத்தலில் ஈடுபடும் பெரும்புள்ளிகளை கைது செய்ய ஆந்திர மாநில காவல் துறை உத்தரவிடுகிறது .
தமிழ் நாட்டில் கடத்தலில் சம்பந்தப்பட்ட முக்கிய நபரான மம்முட்டியை கண்காணிக்க காவல்துறையின் சிறப்பு அதிகாரியான தனுஷை சாய் பல்லவி நியமிக்கிறார் .
அதன்படி தனுஷ் ஊர் திருவிழாவில் மம்முட்டியை காப்பாற்ற தனுஷை குடும்பத்தில் ஒருவராக நினைத்து நம்பிக்கையுடன் தனது உதவியாளராக வைத்து கொள்கிறார் .
அதே சமயம் மம்மூட்டியுடன் இணைந்த தனுஷ் செம்மர கடத்த கூட்டத்தின் தலைவனான துபாயில் இருக்கும் நஸ்ரூதின் ஷா உள்ளிட்ட அனைவரது தகவல்களை உளவாளியாக உடனுக்குடன் சாய் பல்லவிக்கு தெரிவிக்கிறார் .
இந்த நிலையில், திருவண்ணாமலையிலிருந்து மரம் வெட்டும் அப்பாவி தமிழக கூலித்தொழிலாளர்களை ஆந்திர மாநிலத்தின் செம்மரம் கடத்தல் தடுப்பு படை போலீஸார் என்கவுண்டர்கள் செய்கிறார்கள்.
எதுவும் தெரியாமல் லாரி ஓட்டுநராக சென்ற தனுஷின் தந்தை இந்திரன்ஸ் இந்த என்கவுண்டரில் கொலை செய்யப்படுகிறார்.

இச் சூழ்நிலையில் செம்மர கடத்தல் தொழிலால் பாதிக்கப்பட்டு ஆந்திராவில் சிறையில் இருக்கும் அப்பாவி தமிழக கூலித்தொழிலாளிகளை மீட்பதற்காக செம்மர கடத்தல் மாஃபியா கும்பலை கைது செய்ய அதிரடியாக களத்தில் இறங்குகிறார் தனுஷ் .
இறுதியில் ஆந்திராவில் சிறையில் இருக்கும் அப்பாவி தமிழக கூலித்தொழிலாளிகளை காப்பற்றினாரா ? தம்பியாக பாவித்து தன் குடும்பத்தில் ஒருவராக இருந்த தனுஷ் யாரென்று மம்முட்டிக்கு தெரிந்ததா ? என்பதுதான் ஓம் படத்தின் மீதி கதை.
காவல்துறை புலனாய்வு அதிகாரியாக நாயகன் தனுஷ் இளமை துடிப்பான நடிப்பில் காவல்துறை உளவாளியாக , கணவனாக , தந்தை மீது பாசம் ,மம்முட்டி மேல் கொண்ட மரியாதை என இயல்பான நடிப்பில் உணர்வுபூர்வமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
செம்மரம் கடத்தலில் ஈடுபட்டிருப்பவராக நடித்திருக்கும் மம்மூட்டியின் முதிர்ச்சியான நடிப்பு மற்றும் திரை இருப்பு படத்திற்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது. குறிப்பாக செம்மரம் கடத்தல் தொழில் மற்றும் அதன் பின்னணியில் இருக்கும் அரசியலைப் பற்றி பேசியிருக்கும் மம்மூட்டியின் கதாபாத்திரம், அதன் முலம் பாதிக்கப்படும் அப்பாவி மக்களுக்காக குரல் கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறது.
ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சாய் பல்லவி கம்பீரமான அதிகாரியாக அதே நேரத்தில் இளகிய மனம் கொண்டவராக சிறப்பான நடிப்பில் முத்திரை பதிக்கிறார் .
தனுஷின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீலீலா, செம்மரம் மாஃபியாவின் தலைவர் நஸ்ரூதின் ஷா, இந்திரன்ஸ் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்கள் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
ஒளிப்பதிவாளர் கே.எழில் அரசின் ஒளிப்பதிவும் சாய் அபயங்கரின் இசையும் படத்திற்கு பக்க பலம் .
சில ஆண்டுகளுக்கு முன் மரம் வெட்டும் தமிழக கூலித்தொழிலாளிகள் ஆந்திர மாநில போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதையுடன் விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் இரண்டு மாநிலங்களின் அரசியல் , நிர்வாக ரீதியான சிக்கல்கள், செம்மரக் கடத்தல் பின்னணி, காவல்துறையின் நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் தனுஷ் ரசிகர்கள் கொண்டாடும் நடனம் , ஆக்ஷன் என வழக்கமான காட்சிகளுடன் தமிழக அப்பாவி கூலித்தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதையும் அழுத்தமாக பதிவு செய்து ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும்படி திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி,
மொத்தத்தில், ‘ஓம்’ ஓங்காரம்
ரேட்டிங் 3.5 / 5


