MediaTalks Logo
Header Advertisement
reviews
22 November 2026 at 20:54•143 Views

‘அப்பா குட்டி’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
 ‘அப்பா குட்டி’ - விமர்சனம்

ஊட்டியில் சினிமா தயாரிப்பு நிர்வாகியாக ஜென்சன் திவாகருடன் இணைந்து பணிபுரியும் மனைவியை இழந்த நாயகன் விஜய் ஆண்டனி, தன் மகளான சிறுமி லிதன்யாவுடன் வாழ்ந்து வருகிறார் .

சிறுமி லிதன்யா படிக்கும் பள்ளியின் ஆசிரியை ப்ரீத்தி அஸ்ராணி மனைவி இல்லாமல் மகளுடன் தனியாக வாழும் விஜய் ஆண்டனியை ஒருதலையாக காதலிப்பதோடு, அதிக அக்கறையுடன் லிதன்யாவை கவனித்து கொள்கிறார் .

ப்ரீத்தி அஸ்ராணியின் அம்மாவான ஸ்ரீஜா ரவி மகளின் திருமண மாப்பிளையை தேடும் வேலையை செய்தாலும் அதனை மறுக்கும் பிரித்தி அஸ்ராணி, விஜய் ஆண்டனி இறந்ததாக சொல்லும் அவரது மனைவியை ஊட்டியில் கணவர், குழந்தை என்று குடும்பமாக பார்க்கிறார்.

லிதன்யாவின் அம்மாவை பார்த்ததாக விஜய் ஆண்டனியிடம் ப்ரீத்தி அஸ்ராணி தெரிவிக்கும்போது குழந்தையிடம் மறைக்கப்பட்ட உண்மையை சொல்லாமல் பொய்யை சொன்னதாக மனமுடைந்து சொல்கிறார் விஜய் ஆண்டனி

இந்த நிலையில், விஜய் ஆண்டனியின் மகளுக்கு திடீர் உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மரபணு இரத்தக் கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுமியின் நிலை மிக மோசமாக இருப்பதாகவும், அவருக்கு உடனடியாக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை (ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை) செய்தால் மட்டுமே அவரை காப்பாற்ற முடியும், என்று சொல்கிறார்கள்.

இதனால் விஜய் ஆண்டனியும், அவரது மனைவியும் இணைந்து மீண்டும் ஒரு குழந்தை பெற்றெடுத்தால் மட்டும் மகளை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் சொல்ல , அந்த நேரத்தில் விஜய் ஆண்டனிக்கு திருமணமே ஆகவில்லை என்று. அதோடு, அந்த குழந்தை ஆதரவற்ற குழந்தை என்ற உண்மை ப்ரீத்தி அஸ்ராணிக்கு தெரிய வருகிறது. .

ஆதரவற்ற அனாதை குழந்தையான லிதன்யாவை காப்பாற்ற வேண்டும் என்றால், அவரது உண்மையான பெற்றோர்கள் நினைத்தால் மட்டுமே முடியும் என்ற சுழலில் ப்ரீத்தி அஸ்ராணியுடன் சேர்ந்து லிதன்யாவின் பெற்றோரை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார் விஜய் ஆண்டனி.

லிதன்யாவின் உண்மையான பெற்றோர்களை தேடும் விஜய் ஆண்டனி, அவர்கள் மூலம் தன் வளர்ப்பு மகளை காப்பாற்றினாரா ?

திருமணமே ஆகாத விஜய் ஆண்டனியிடம் கைக்குழந்தை வந்தது எப்படி ? ஒருதலையாக காதலித்த ப்ரீத்தி அஸ்ராணி முடிவில் விஜய் ஆண்டனியை திருமணம் செய்து கொண்டாரா ? என்பதே ‘அப்பா குட்டி’ படத்தின் மீதி கதை.

நாயகனாக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி அமைதியான நடிப்பில் அப்பாவி மனிதராக அன்பு , பாசம் , ஏக்கம் , தவிப்பு என கதாப்பாத்திரத்துடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .

பள்ளி ஆசிரியையாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ராணி அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடிப்பில் திரைக்கதைக்கு பக்க பலமாக இருக்கிறார் .

விஜய் ஆண்டனியின் மகளாக நடித்திருக்கும் சிறுமி லிதன்யா, இயல்பான நடிப்பாலும், குறும்புத்தனமான பேச்சாலும் ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறார் .

விஜயன் ,பகவதி பெருமாள், முத்துக்குமார், அருவி மதன், ஹரிப்பிரியா இசை, ஸ்ரீஜா ரவி, குமார் நடராஜன், பிரவீனா, லிஸி ஆண்டனி, சித்ரா லக்‌ஷ்மணன், மூணாறு ரமேஷ், ஜென்சன் திவாகர், ஹரிதா முத்தரசன், முருகாந்தம்.ஆர் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .

விஜய் ஆண்டனியின் ஜீவனுள்ள இசையும், ஒளிப்பதிவாளர் ராஜீவ் ராஜேந்திரனின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம் .

படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியிருக்கும் விஜய் ஆண்டனி, நேர்த்தியாக காட்சிகளை தொகுத்து இயக்குநரின் கதையை சரியான முறையில் விவரித்திருக்கிறார்.

வட இந்தியாவில் புனேவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதையுடன் அப்பா – மகள் இடையிலான பாசப் போரட்டத்தை அழுத்தமான திரைக்கதை அமைப்பில் சொல்வதுடன் மனதை கலங்க வைக்கும் கிளைமாக்ஸ் காட்சியை வடிவமைத்து குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கும் விதத்தில் அப்பா மகளின் உறவை உணர்வுப்பூர்வமாக உருவாக்கி திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் மு.மாறன்

மொத்தத்தில், ‘அப்பா குட்டி’ பாச பிணைப்பு

ரேட்டிங் 2 . 5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: