MediaTalks Logo
Header Advertisement
reviews
26 November 2026 at 22:06•137 Views

தமிழ் 'ZEE 5' OTT தளத்தில் வெளியான ‘ஆக்டோபஸ்’ வெப் தொடர் -விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
தமிழ் 'ZEE 5' OTT தளத்தில் வெளியான  ‘ஆக்டோபஸ்’  வெப் தொடர் -விமர்சனம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வாணிமங்கலம் பகுதியில் அன்பு நகர் என்ற குடியிருப்பு பகுதியில் தன் தாய் , தந்தை என குடும்பத்துடன் அர்ச்சனா ரவிச்சந்திரன் வாழ்ந்து வரும் நிலையில் எதிர் வீட்டிற்க்கு தன் மனைவி சித்து குமரேசனுடன் குடியேறுகிறார் அஸ்வின் குமார் .

அன்பு நகர் குடியிருப்பில் வாழும் அனைவரும் வேறு வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் ஒருவருக்குள் ஒருவர் அன்பாக சித்தப்பா , மாமா , அத்தை , பாட்டி என அனைவரும் ஒரு சொந்த உறவு முறையாகவே பழகி வருகின்றனர்.

இந்நிலையில் அஸ்வின் தனது மனைவி சித்து குமரேசனை சைக்கோத் தனமாக துன்புறுத்தி தினமும் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தும் கணவனாக வாழ்கிறார்.

இதற்கிடையில் கல்லூரியில் ஒன்றாக படிக்கும் அர்ச்சனா ரவிச்சந்திரனின் சகோதரியான கலைவாணி பாஸ்கரும் ,வினோத் கிஷனும் காதலிக்கின்றனர் .

மற்றொரு பக்கம் அன்பு நகரில் ஒரு நாள் இரவு நேரத்தில் குடி போதையில் இருக்கும் அஸ்வின் குமாரின் கொடுமையினால் சித்து குமரேசனின் அலறல் சத்தம் குடியிருப்புவாசிகள் அனைவருக்கும் கேட்கிறது .

விடிந்த பிறகு சித்து குமரேசனின் நடமாட்டம் அந்த வீட்டில் இல்லாததால் அஸ்வின் குமார் மீது கொலை பழி சுமத்தி அன்பு நகர் குடியிருப்பு வாசிகள் காவல்துறையில் புகார் கொடுக்கின்றனர்.

போலீஸ் அஸ்வினை விசாரிக்கும் போது திருமணம் ஆகாத நபரின் வீட்டை போல தன் வீடு இருப்பதையும் சித்து குமரேசன் என்கிற பெண்ணே தனக்கு யார் என்று தெரியாது எனக்கு திருமணம் ஆகவில்லை நான் பேச்சிலர் என அஸ்வின் போலீசாரிடம் தெரிவிக்க அர்ச்சனா ரவிச்சந்திரனுடன் சேர்ந்து குடியிருப்பு வாசிகள் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர் .

இதே சமயம் அர்ச்சனா ரவிச்சந்திரன் தன் குழுவுடன் சேர்ந்து புலனாய்வில் ஈடுபட்டு அஸ்வின் குமாரின் உண்மை முகத்தை வெளிப்படுத்தி குற்றவாளி என நிரூபிக்க நீதி மன்றத்தில் நீதிபதி பகவதி பெருமாள் முன்னிலையில் குற்றவாளி கூண்டில் ஏற்றுகிறார் .

இறுதியில் அஸ்வின் திருமணமானவரா அல்லது பேச்சிலரா? அன்பு நகர் குடியிருப்பில் சித்து குமரேசன் அனைவரிடத்திலும் அன்புடன் பழகியது உண்மையா ? அஸ்வின் திருமணம் ஆனவர் என்றால் சித்து குமரேசன் எங்கே ? அர்ச்சனா ரவிச்சந்திரனின் சகோதரியான கலைவாணி பாஸ்கரின் காதலை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டார்களா ? என்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லும் அதிரடியான சஸ்பென்ஸ் திரில்லர் வெப் தொடர்தான் ‘ஆக்டோபஸ்’

கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்கும் அர்ச்சனா ரவிச்சந்திரன் மிக சிறப்பாக அனைத்து உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தி உணர்வுபூர்வமான நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலைவாணி பாஸ்கர் , வினோத் கிஷன் , வில்லத்தனத்தில் மிரட்டும் அஸ்வின் குமார் , அவரது மனைவியாக சித்து குமரேசன் ,கோடங்கி வடிவேலு, பகவதி பெருமாள் என நடித்த நடிகர்கள் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர் .

இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தி இசையும் , ஒளிப்பதிவாளர் கண்ணா ஆரின் ஒளிப்பதிவும் தொடருக்கு பக்க பலம் .

குடியிருப்பு வாசிகளுடன் சகஜமாக அன்புடன் பழகிய பெண் கணவனால் கொடுமைப்படுத்தப்பட்டு மர்மமாக காணாமல் போகும் கதையை மையமாக வைத்து ஆரம்பம் முதல் முடிவு வரை விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் ஒவ்வொரு எபி சோடும் முடியும் தருவாயில் பார்வையாளர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி யாரும் யூகிக்க முடியாத எதிர்பாராத திருப்பங்களுடன் சிறப்பான இயக்கத்தில் அதிரடியான சஸ்பென்ஸ் திரில்லர் தொடராக உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஜெயச்சந்திர ஹாஷ்மி.

ரேட்டிங் - 3.5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: