MediaTalks Logo
Header Advertisement
reviews
27 November 2026 at 12:16•105 Views

‘டெலிவரி பாய்' - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
 ‘டெலிவரி பாய்' - விமர்சனம்

சாண்டி டாக்கீஸ் சார்பில் லெனின் மாதேஸ்வரன் மற்றும் அசசி கிரியேசன்ஸ் சார்பில் அமுதா லியோனி தயாரிப்பில் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்து இயக்குநர் நானி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘டெலிவரி பாய்

கோயம்புத்தூரில் ராதிகா சரத்குமாரின் மகனான லியோ சிவகுமார் உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்து வருகிறார் . இதே நேரத்தில் சிறியதாக டிபன் கடை வைத்திருக்கும் ராதிகா சரத்குமாருக்கு உதவியாக இருக்கிறார் .

இந்நிலையில் லியோ சிவகுமார் போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் அரசாங்க வேலைக்கான முயற்சி செய்கிறார். அதே நேரத்தில் லியோ சிவகுமாரும் பிரிகிடா சாகாவும் காதலிக்கின்றனர் .

இதற்கிடையில் எதிர்பாராத விபத்தில் தாயார் ராதிகா சரத்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

தாயார் ராதிகா சரத்குமாரை காப்பாற்றுவதற்காக துஷ்யந்திடம் இருக்கும் பணத்தை திருடி விடுகிறார்.

சில மாதங்களுக்கு பின்பு ராதிகா சரத்குமார் குணமடைந்த பிறகு, சென்னையில் வசிக்கும் துஷ்யந்திடம் தான் திருடிய பணத்தைமீண்டும் ஓப்படைக்க செல்கிறார் .

இந்த சூழ்நிலையில் மது பாரின் உரிமையாளரான வி.எஸ். மாதேஸ்வரன் ஏழு பேர் கொண்ட கூலிப் படையை வைத்து சட்ட விரோதமான செயல்களை செய்து வருகிறார்

வி.எஸ். மாதேஸ்வரனின் ஏழு பேர் கொண்ட கூலிப் படை கும்பலில் ஒருவனது மரணத்துக்கு துஷ்யந்த் காரணமாகிறார்.

இந்த மரணத்தினால் துஷ்யந்தின் உயிருக்கு ஆபத்து இருப்பதை அறிந்துக் கொள்ளும் லியோ சிவக்குமார் எதிரிகளிடமிருந்து துஷ்யந்தை காப்பாற்ற போராடுகிறார் .

இறுதியில் எதிரிகளிடமிருந்து லியோ சிவக்குமார் துஷ்யந்தை காப்பாற்றினாரா? இல்லையா ? என்பதை விறு விறுப்பான ஆக்‌ஷனோடு சொல்வதே ‘டெலிவரி பாய்’.

நாயகனாக நடித்திருக்கும் லியோ சிவக்குமார் இளமை துள்ளும் நடிப்பில் காதல் நாயகனாகவும் ,. தனது தாயின் உயிரைக் காப்பாற்றப் போராடும் மகனாகவும் , இந்த படத்திற்காக கடினமான உழைப்பில் ஆக்‌ஷன் ஹீரோவாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இயல்பான நடிப்பில் முத்திரை பதிக்கிறார் .

நாயகியாக நடித்திருக்கும் பிரிகிடா சாகா அளவான நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார் .

நாயகனுக்கு தாயாக நடித்துள்ள ராதிகா சரத்குமார், தனது அனுபவமிக்க நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார். மகன் மீதான பாசம், குடும்பத்தின் மீதான அக்கறை, உடல்நலப் பாதிப்பால் ஏற்படும் வலி என முதிர்ச்சியான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார் .

வி.எஸ். மாதேஸ்வரன் ,காளி வெங்கட், ஜென்சன் திவாகர், போஸ் வெங்கட், துஷ்யந்த், உதயா தீப் , ஏழு பேர் கொண்ட நண்பர்களாக கூலிப் படையினர் என நடித்த நடிகர்கள் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .

சுந்தரமூர்த்தி.கே.எஸ் இசையும் ,அசோக்குமார் ராஜ் மற்றும் பிரசன்னா எஸ்.குமார் ஆகியோரது ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .

உணவு டெலிவரி செய்யும் நாயகன் சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்களை மையமாக வைத்து காதல் ,பாசம் , மனித நேயம் ,ஆக்ஷன் என விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் ஆரம்பம் முதல் முடிவு கதையை நேர்த்தியாக கையாண்டு அனைவரும் ரசிக்கும் ஆக்ஷன் படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் நானி.

‘டெலிவரி பாய்’ ரசிக்க வைக்கும் ஆக்‌ஷன் திரில்லர்.

மதிப்பீடு 3.5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: