MediaTalks Logo
Header Advertisement
reviews
23 October 2026 at 23:12•119 Views

‘ஹைக்கூ’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
 ‘ஹைக்கூ’ - விமர்சனம்

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து, மேத்யூ அருளானந்து தயாரிப்பில் இயக்குநர் யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ஹைக்கூ’

கோயம்புத்தூரில் வாழ்ந்து வரும் மைம் கோபியின் மகனான ஏகன் ஆண்கள் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வரும் நிலையில் நண்பர்களுடன் இவர் செய்த பிரச்சனையால் மேலிடத்தால் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டு முடிவில் பெண்கள் படிக்கும் மகளிர் கல்லுரியில் இறுதி ஆண்டில் ஒரே ஒரு ஆண் மாணவனாக அக் கல்லூரியில் படிக்கிறார் .

இந்நிலையில் மகளிர் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவிகளுக்கு நடுவில் ஒரேயொரு மாணவனாக சிக்கி கொண்டு திணறும் ஏகன் தன்னுடன் படிக்கும் மாணவியான ஸ்ரீதேவிக்கு இக் கட்டான சூழ்நிலையில் வகுப்பின் பேராசிரியரிடமிருந்து காப்பாற்றுகிறார் .

ஆரம்பத்தில் நட்பாகத் தொடங்கும் இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மலர்கிறது. கல்லூரி படிப்பிற்கு பிறகு ஏகனின் ஈகோதனமான சந்தேக புத்தியினால் ஸ்ரீதேவி தன் காதலை வெறுத்து பெற்றோர்கள் நிச்சயித்த வரனை திருமணம் செய்து கொள்கிறார் .

காதலில் தோல்வியடைந்து மனமுடைந்து இருக்கும் ஏகன் சென்னையில் ஐடி கம்பெனியில் மேலாளராக வேலை செய்கிறார் . ஒரு கட்டத்தில் தன்னுடன் பணிபுரியும் பெமினா ஜார்ஜை ஏகன் சந்திக்கிறார் .

பெமினா ஜார்ஜ் சந்தேகப்படும் தன் காதலனால் குழப்பத்தில் இருக்கும்போது ஏகனின் அன்பான வார்த்தைகள் ஆறுதலாக இருப்பதால் பெமினா ஜார்ஜ் ஏகனை காதலிக்க ஏகனும் அவரது காதலை ஏற்று கொள்ள இருவரும் காதலிக்கின்றனர் .

எந்த பிரச்சனை செய்யாமல் காதலிக்கும் ஏகனை சந்தேகப்படும் பெமினா ஜார்ஜ் ஸ்ரீதேவியின் நினைவுகளுடன் தன்னுடன் பழகுவதை தெரிந்து கொண்டு ஏகனின் முன்னாள் காதலியான ஸ்ரீதேவியை சந்திக்கிறார் பெமினா ஜார்ஜ்.

ஸ்ரீதேவி ஏகனின் ஈகோதனமான சந்தேக புத்தியினால் காதலனை பிரிந்து தந்தை பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டதை பெமினா ஜார்ஜிடம் தெளிவாக சொல்ல ,,, ஸ்ரீதேவியின் காதல் நினைவுகளில் தன்னை காதலிக்கும் ஏகனை விட்டு விலகுகிறார் பெமினா ஜார்ஜ்.

இறுதியில் பிரிந்த காதலர்களான ஏகனும் பெமினா ஜார்ஜும் மீண்டும் இணைந்தார்களா ? என்பதுதான் ‘ஹைக்கூ’ படத்தின் மீதி கதை .

நாயகனாக ஏகன் இளமை துள்ளலான கதாபாத்திரத்தில் கல்லூரி மாணவனாக , காதலனாக , ஐடி கம்பெனியில் மேலாளராக, செண்டிமெண்ட் , தவிப்பு , ஏக்கம் என உடல் மொழியில் கதையுடன் இணைந்து அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தி மிக சிறப்பான நடிப்பில் பாராட்டும்படி நடித்துள்ளார்.

நாயகிகளாக ஸ்ரீதேவி அபல்லா,பெமினா ஜார்ஜ் கதைகேற்றபடி இருவருமே உணர்வுபூர்வமாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .

மைம் கோபி .இந்துமதி மணிகண்டன் ,அதிர்ச்சி அருண், சுப்பிரமணிய சேது, அதியமான் என படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .

இசையமைப்பாளர் சித்து குமாரின் இசையும் , ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .

கல்லூரி பருவ காதலுடன் காதல் என்பது ஒருவரை ஒருவர் விரும்புவது மட்டுமல்ல காதலர்களுக்கு புரிதலான காதல் அவசியம் என்பதை திரைக்கதையில் அழுத்தமாக சொல்வதுடன் ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும் ரொமான்டிக் காமெடி திரைப்படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் யுவராஜ் சின்னசாமி .

மொத்தத்தில் - ‘ஹைக்கூ’ புரிதல் இல்லா காதல்

ரேட்டிங் - 3 .5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: