MediaTalks Logo
Header Advertisement
reviews
24 October 2026 at 01:12•389 Views

'418' - விமர்சனம் (4 / 5)

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
 '418' - விமர்சனம்  (4 / 5)

இயக்குநர் பிரசாந்த் நீல் வழங்கும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் சங்கர் யலமஞ்சிலி மற்றும் நவீன் யெர்னேனி தயாரிப்பில் இயக்குநர் கீர்த்தன் நடகௌடா இயக்கத்தில் திகிலூட்டும் ஹாரர் மிஸ்ட்ரி திரைப்படம் '418'

இயற்கை எழில் சூழ்ந்த கர்நாடகாவில் வேதகிரி கிராமத்தில் விம்ஸ் மருத்துவக் கல்லூரியில் அமைந்துள்ள மருத்துவமனையின் அருகே 15 ஆண்டுகளாகப் பூட்டப்பட்டிருக்கும் மருத்துவக் கல்லூரி விடுதிக்குள் யாரும் செல்ல முடியாதபடி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கபடுகிறது .

இந்நிலையில் கொரானா காலகட்டமான 2020ஆம் ஆண்டு மருத்துவ படிப்பிற்காக இளைஞன் சூர்ய ராஜ் வீரபத்தினிஅந்த மருத்துவ கல்லூரியில் படிப்பதற்காக தன் தாய் தந்தையுடன் மருத்துவக் கல்லூரி விடுதிக்கு வருகிறார் .

அந்த கல்லூரியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மருத்துவக் கல்லூரியில் 15 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்த கல்லூரி விடுதி மீண்டும் திறக்கப்பட்டு சூர்ய ராஜ் வீரபத்தினி உள்ளே செல்லும்போது சூர்ய ராஜ் வீரபத்தினியின் அம்மா கல்லூரி விடுதிக்குள் நுழைய கல்லூரி வார்டன் முதல் செக்யூரிட்டி வரை பெண்கள் இந்த விடுதிக்குள் உள்ளே வரக் கூடாது அவரை விரட்டுகின்றனர்.

Image
Image

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு அசம்பாவிதத்தின் காரணமாக அந்த கட்டிடத்தின் உள்ளே பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பெண்கள் உள்ளே சென்றால் பல உயிர்கள் பலியாகும் என்ற பயத்தில் அந்த மருத்துவ விடுதியின் வார்டன் கண்டிப்புடன் நடந்து கொள்கிறார்.

இந்நிலையில் மருத்துவ மாணவர் விடுதிக்குள் சூர்ய ராஜ் வீரபத்தினிக்கும் அவனுடைய நண்பனான சரண் லக்கராஜுக்கும் அறை எண் 417 ஒதுக்கப்படுகிறது.

417 அறையில் நண்பனுடன் தங்கும் சூர்ய ராஜ் வீரபத்தினி தன்னை சுற்றி நிலவும் மர்மமான அமானுஷ்ய நிகழ்வுகளால் மன உளைச்சலால் அவதிப்படுகிறார்.

சூர்ய ராஜ் வீரபத்தினியுடன் அறையில் ஒன்றாக தங்கும் சரண் லக்கராஜு அவர் சொல்வதை நம்ப மறுக்கிறார் .

ஒரு கட்டத்தில் சூர்ய ராஜ் வீரபத்தினியுடன் ,சரண் லக்கராஜு அவரது நண்பர்கள் ‘அறை எண் 418’ அறையை கதவைத் திறக்க முற்படும்போது கொடூரமான சூழ்நிலை அங்கு உருவாகிறது .

மன இறுக்கத்துடன் அமானுஷ்ய நிகழ்வுகளும் விபரீதங்களும் அந்த அறையைச் சுற்றி ஏன் நடக்கின்றன என்பதை சூர்ய ராஜ் வீரபத்தினி தீவிர முயற்சியில் கண்டுபிடிக்கும்போது யக்க்ஷகானா கலைஞர் சைத்ரா ஆச்சாரின் திகிலான பின்னணியை கேட்டு அதிர்ச்சியடைகிறார் .

இறுதியில் 2005 ஆம் ஆண்டு இந்த விடுதியில் என்ன நடந்தது ? என்ன காரணத்திற்காக உள்ளே பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை ? யக்க்ஷகானா கலைஞர் சைத்ரா ஆச்சார் யார் ? அவரது மர்ம பின்னணி என்ன ? என்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லும் படம்தான் ‘418’

Image
Image

கதையின் முக்கிய கதாப்பாத்திரத்தில் யக்க்ஷகானா கலைஞராக நடித்திருக்கும் சைத்ரா ஆச்சார் உணர்வுபூர்வமாக தேவிகா கதாப்பாத்திரமாக அழுத்தமான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வாழ்ந்திருக்கிறார் .

இவர்களுடன் சூர்ய ராஜ் வீரபத்தினி, சரண் லக்கராஜு, ப்ரீத்தி பகடலா, சஷாங்க் பாட்டீல், ஸ்ரீ வைஷ்ணவ் என நடித்த நடிகர்கள் அனைவரும் நடிப்பில் திரைக்கதைக்கு பக்க பலமாக இருக்கின்றனர்.

இசையமைப்பாளர் வெங்கி G G யின் இசை படத்திற்கு கூடுதல் பலம் ..

திகிலான மர்ம கதையின் பின்னணியுடன் ஆரம்பம் முதல் முடிவு வரை விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் அறிவியல், மூடநம்பிக்கை , மர்மம் மற்றும் அமானுஷ்ய நிகழ்வுகள் என யூகிக்க முடியாத திருப்பங்களுடன் ஹாலிவுட் படத்திற்கு நிகராக சஸ்பென்ஸ் ஹாரர்-த்ரில்லருடன் சுவாரஸ்யமான கதை களத்துடன் திகில் பட ரசிகர்களுக்கு விருந்தாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் கீர்த்தன் நடகௌடா .

மொத்தத்தில் ‘418 ‘ மிரள வைக்கும் திகில்

ரேட்டிங் - 4 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: