' செய் செய்யாதே’ - விமர்சனம்

ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் சார்பில் சுப்புலட்சுமி ஜெயராம் தயாரித்துள்ள இப்படத்தை டாக்டர் எஸ். ராஜா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ' செய் செய்யாதே’
பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, குரு விஜய், தபிதா குணரத்னே, தர்ஷினி ரெட்டி ,மோனிகா ப்ரீத்தி V.,பிரதீக்ஷா மனோ பிரசாந்த் ,சிதம்பரம் PDK ஆகியோர் நடித்துள்ளனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவத்துறை முதல்வராக பணிபுரியும் டாக்டர் எஸ். ராஜா உடல் நலக் குறைவினால் அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு கண்ணியமான முறையில் நேர்மையாக சிகிச்சை அளித்து, நடுத்தர மக்களுடன் ஏழ்மை நிலையில் இருக்கும் மதுரை வாழ் மக்களின் பாதுகாவலனாக மருத்துவ சேவை செய்து வருகிறார்.
இந்நிலையில் டாக்டராக இருக்கும் அவரது மனைவி தர்ஷினி ரெட்டி வங்கி கடனில் சொந்தமாக பெண்களுக்கென்று சிறப்பு மருத்துவமனை ஆரம்பித்து சிகிச்சைக்கு வரும் பெண்கள் எளிய நிலையில் இருந்தாலும் சிகிச்சை என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணத்தை வசூலிக்கிறார்.

தர்ஷினி ரெட்டி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளையும் டாக்டர் எஸ். ராஜா மனைவிக்கு தெரியாமல் அரசு மருத்துவமனைக்கு வரவழைத்து தகுந்த சிகிச்சை அளித்து மனிதநேயத்துடன் அவர்களுக்கு உதவுகிறார்.
மற்றொரு பக்கம் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் அவரது மகனான நாயகன் குரு விஜய் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் தொழிலதிபர் சிதம்பரம் PDKவின் மகளான நாயகி தபிதா குணரத்னேவை காதலிக்கிறார் .
இதற்கிடையில் சிதம்பரத்தின் PDKவின் மருந்து கிடங்குகளுக்கு அரசு அதிகாரிகளால் சீல் வைக்கப்படுகிறது.
இச் சூழ்நிலையில் டாக்டர் எஸ். ராஜா அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் முதல் அனைத்து பணியாளர்களும் காலை சரியான நேரத்திற்கு வர வேண்டும் என்கிற உத்தரவை பிறப்பிக்கிறார் .
இந்நேரத்தில் டாக்டராக பணிபுரியும் அமைச்சரின் உறவினர் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு வராததால் அவரை டாக்டர் எஸ் ராஜா கண்டிக்கிறார்.
மேலும் மருத்துவமனையில் செவிலியர்கள் செய்யும் அக்கிரமங்களை கண்டுபிடித்து டாக்டர் எஸ் ராஜா அவர்களுக்கும் புத்திமதி சொல்கிறார் .
இதனால் டாக்டர் எஸ் ராஜாவின் நோயாளிகளிடமும், பணியாளர்களிடம் பழகும் நேர்மையான அணுகு முறையால் அனைத்திலும் பாதிக்கப்பட்ட எதிரிகளான அவரது மனைவி தர்ஷினி ரெட்டி மற்றும் அமைச்சர், தொழிலதிபர் சிதம்பரம் PDK என அனைவரும் பணியை மாற்றி மதுரையை விட்டு விரட்ட திட்டமிடுகின்றனர்.
இந்நேரத்தில் கொரோனா போன்ற ஒரு தொற்று நோயினால் ஏற்படும் மர்ம காய்ச்சலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவதிப்படும் நிலையில் அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கிறது.
இறுதியில் எதிரிகள் திட்டத்திலிருந்து டாக்டர் எஸ் ராஜா தப்பித்தாரா ? முடிவில் என்ன நடந்தது ? என்பதை எதிர்பாராத திருப்பங்களுடன் விறு விறுப்பாக திரைக்கதை அமைப்பில் உருவாக்கப்பட்ட படம்தான் ‘செய் செய்யாதே’

இயக்குனராக படத்தை இயக்கியதுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டாக்டர் எஸ் ராஜா இயல்பான நடிப்பில் அறிமுக நடிகரை போல இல்லாமல் கதாபாத்திரத்துடன் இணைந்து உணர்வுபூர்வமான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
நாயகனாக நடித்திருக்கும் குரு விஜய் காதல் , நடனம் , செண்டிமெண்ட் என உடல் மொழியில் இளமை துள்ளும் நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார் .
நாயகியாக தபிதா குணரத்னே கதைகேற்றபடி அளவான நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார் .
சிறப்புத் தோற்றத்தில் தமிழக முதலமைச்சராக நடித்திருக்கும் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா ,டாக்டர் எஸ் ராஜாவின் மனைவியாக நடித்திருக்கும் தர்ஷினி ரெட்டி, மோனிகா ப்ரீத்தி V,
பிரதீக்ஷா மனோ பிரசாந்த் என படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
டாக்டர் எஸ் ராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் . பின்னணி இசை படத்திற்கு பக்க பலம் .
ஒளிப்பதிவாளர் ராம்நாடு வாசு P வின் ஒளிப்பதிவில் காட்சிகள் தரமாக உள்ளது .
மருத்துவத்தை மையமாக கொண்ட கதையுடன் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, செவிலியர்களின் சேவை, குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் என அனைத்தும் கலந்த திரைக்கதை அமைப்பில் சமூக அக்கறையுடன் மருத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துரைக்கும் கருத்துகளுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி அனைவரும் ரசிக்கும்படி திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் டாக்டர் எஸ். ராஜா (Dr. S. Raja M.D., USA)
மொத்தத்தில் ‘செய் செய்யாதே’ சமூக சிந்தனை
ரேட்டிங் - 3.5 / 5


