MediaTalks Logo
Header Advertisement
cinema news
30 October 2026 at 18:58•133 Views

இயக்குநர் கே.பாலச்சந்தர் 96வது பிறந்தநாளை முன்னிட்டு 'KB - 96' விழா !

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
இயக்குநர் கே.பாலச்சந்தர் 96வது பிறந்தநாளை முன்னிட்டு 'KB - 96' விழா !

'KB - 96' விழாவில் நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், சின்னி ஜெயந்த், சச்சு, அம்பிகா, சுஹாசினி ஆகியோர் கலந்துக் கொண்டனர்!

இயக்குநர் கே.பாலச்சந்தர் 96வது பிறந்தநாளை முன்னிட்டு, கே.பாலச்சந்தர் படங்களின் பாடல்களை, 'KB - 96' என்ற பெயரில் இசை நிகழ்ச்சியை, இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்கத்தின் சார்பில், தி.நகர் பாரத் கலாச்சார் ஒய்.ஜி.பி ஆடிடோரியத்தில் நடைபெற்றது!

Image
Image

இந்நிகழ்சியை இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்கத்தின் தலைவர் நாகா, பொதுச்செயலாளர் கவிதாலயா வீ.பாபுவின் மேற்பார்வையில், பொருளாளர் முகம்மது இலியாஸ், கே.பாலசந்தர் மகள் புஷ்பா கந்தசாமி, மருமகன் கந்தசாமி, துணைத் தலைவர்கள் ஸ்டில்ஸ் ரவி, நடிகர், பூவிலங்கு மோகன், இணைச் செயலாளர்கள் சுரேஷ், ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் ரகுநாதரெட்டி, கணேஷ், தேனீ செல்வம், மாஸ்டர் பிரபாகர், தமிழ் பாரதி, ஸ்வேதா, செலக்ட் குமார், இளைய கட்டபொம்மன், கோவிந்தராஜன் ஆகியோர் இணைந்து இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

முரளியின் மெளனராகம் இசைக்குழுவினர், KB - 96 இசை நிகழ்ச்சியை நடத்தினர்.

Image
Image

நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர்கள் ஒய்.ஜி.மகேந்திரன், சின்னி ஜெயந்த், ராம்ஜி, ஜெயந்த், நடிகைகள் குமாரி சச்சு, அம்பிகா, சுஹாசினி, ஸ்ரீலோகா,

சைலஜா செல்லூர், பி.கே.எண்டர்டெயின்மெண்ட் பாலசுப்ரமணியன், இயக்குநர் காரைக்குடி நாராயணன், தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ்.ஜெயந்தி கண்ணப்பன், பின்னனி குரல் நடிகர் ராஜேந்திரன், சின்னத்திரை இயக்குநர் அருந்தவராஜ், நடிகர் சக்கரவர்த்தி, கவிஞர் கோவை மாரிமுத்து ஆகியோர்கள் இவ் விழாவிற்கு வந்து சிறப்பித்தார்கள்.

சின்னிஜெயந்த், பூவிலங்கு மோகன், சாய்ராம், அர்ச்சனா, ஆர்யன், ஸ்ரித்திகா, முகம்மது இலியாஸ் ஆகியோர் மேடையில் பாடினார்கள்.

கவிதாலயா வீ.பாபு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்!

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: