தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு. போட்டியின்றி தலைவராக கவிதாவும், வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் செயலாளராக கோடங்கி ஆபிரகாமும் வெற்றி பெற்றனர்.
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுக்கான தேர்தல் 17ம் தேதி இன்று நடைபெற்றது.
தேர்தல் அதிகாரிகளாக சபீதா ஜோசப், சிங்காரவேலுவும், தேர்தல் பார்வையாளராக வழக்கறிஞர் எழில் இனியனும் இவர்களுடன் பி ஆர் ஓ சங்க செயலாளர் ஜான் ஆகியோர் தேர்தல் பணியை செய்தனர்.
காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 3 மணிக்கு முடிவடைந்தது.
எந்த சங்கத்திலும் இதுவரை நடை பெற்ற எந்த தேர்தல்களிலும் 100 சதவீத வாக்குகள் பதிவானதில்லை.
முதல் முறையாக தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத் தேர்தலில் 100 சதவீத வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
தேர்தல் முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் போட்டியாளர்கள் முன்பு அறிவிக்கப்பட்டது.
மீண்டும் தலைவராக கவிதாவும், பொருளாளராக ஒற்றன் துரை சங்கரும் ஏற்கனவே தேர்வு பெற்ற நிலையில் மற்ற பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சங்க செயலாளராக கோடங்கி ஆபிரகாம், இணைச் செயலாளராக உதய்குமார், துணைத்தலைவர்களாக பரத்குமார், விஜய் ஆனந்த் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
செயற்குழு உறுப்பினர்களாக ஹரிபாபு, சிவசங்கர், ஹரி , ஷாலினி, சதீஷ், ராஜீவ்காந்தி, சதீஷ்குமார், ராம், AMN நாகராஜ், பொற்கொடி, ஜெயக்குமார், கோபால் ஆகிய 12 பேர் செயற்குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் தேர்தல் அதிகாரிகள் சான்றிதழ்கள் வழங்கினர்.
TMJA சங்கத் தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
தலைவர்
கவிதா போட்டியின்றி தேர்வு
துணைத் தலைவர்கள்
பரத் - 64 வாக்குகள்
விஜய் ஆனந்த் - 59 வாக்குகள்
ராதாபாண்டியன் 20 வாக்குகள்
செயலாளர்
கோடங்கி ஆபிரகாம் - 58 வாக்குகள்
கார்த்திகேயன் 24 வாக்குகள்
பொருளாளர்
ஒற்றன் துரை போட்டியின்றி தேர்வு
இணைச் செயலாளர்
உதய்குமார் 61 வாக்குகள்
காதர் ஹுசேன் 21 வாக்குகள்
செயற்குழு உறுப்பினர்கள்:
ஹரி பாபு 79 வாக்குகள்
ஹரி நாகராஜன் 78 வாக்குகள்
பொற்கொடி 76 வாக்குகள்
கார்த்திகாயினி @ ஷாலினி 74 வாக்குகள்
சதீஷ் 74 வாக்குகள்
சிவசங்கர் 73 வாக்குகள்
ராமானுஜம் @ ராம் 71 வாக்குகள்
ராஜீவ்காந்தி 70 வாக்குகள்
ஜெயக்குமார் 70 வாக்குகள்
J.சதீஷ்குமார் 69 வாக்குகள்
நாகராஜ் AMN 68 வாக்குகள்
கோபால் 63 வாக்குகள்
சரவணன் 26 வாக்குகள்
மணிமாறன் 23 வாக்குகள்
தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற்றது.
சபீதா ஜோசப்
தேர்தல் அதிகாரி
תגובות