top of page

'சேகர் கம்முலாவின் குபேரா' விலிருந்து ராஷ்மிகா மந்தனா முதல் தோற்றம் !


'சேகர் கம்முலாவின் குபேரா'விலிருந்து ராஷ்மிகா மந்தனா முதல் தோற்றம் வெளியானது!


தேசிய விருதின் மூலம் அதிக பாராட்டுக்களை பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் சமூகம் சார்ந்த கதையம்சம் கொண்ட 'குபேரா', வரவிருக்கும் பான்-இந்திய திரைப்படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக கருதப்படுகின்றது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த சமூக சார்ந்த கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா கவர்ந்திழுக்கும் காட்சிகளுடன் வெவ்வேறு கதாபாத்திரங்களை பின்னிப் பிணைத்துள்ளார்.


இன்று தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் ராஷ்மிகா மந்தனாவின் அதிகாரப்பூர்வ முதல் தோற்றம் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. ராஷ்மிகா ஒரு அசாதாரணமான, வித்தியாசமான அவதாரத்தில் காணப்படுகிறார், இது பார்வையாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மூத்த நடிகர்களான தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இருவருக்கும் இடையில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது இந்த மகத்தான படைப்புக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


அதிகாரப்பூர்வ முதல் தோற்றம் வெளியிடப்படும் முன்பே தயாரிப்பாளர்களால் கடந்த 2-ஆம் தேதி வெளியிடப்பட்ட முதல் தோற்றத்தின் ஒரு பார்வை, ராஷ்மிகாவின் கதாபாத்திரம் இளஞ்சிவப்பு நிற உடையை அணிந்து, வெறிச்சோடிய இடத்தில் ஒரு சூட்கேஸை பின்னால் இழுத்துச் செல்வதைப் போன்ற தோற்றம் அவரது கதாபாத்திரம் மீதான ஆர்வத்தை அதிகரித்தது. நேற்று, புதிதாக வெளியிடப்பட்ட முதல் தோற்றத்தின் ஒரு பார்வை முழுமையான தோற்றத்தைக் காண பார்வையாளர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


முன்னதாக, 'குபேராவில்' இருந்து நடிகர் தனுஷ் மற்றும் 'கிங்' நாகார்ஜுனா அக்கினேனி ஆகியோரின் முதல் தோற்றமும் வெளியிடப்பட்டது, இது நாடு முழுவதும் பார்வையாளர்களிடமிருந்து உற்சாகமான வரவேற்பைப் பெற்றது.


'குபேரா'வில் தனுஷ், 'கிங்' நாகார்ஜுனா அக்கினேனி, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சர்ப் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் உள்ளனர். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சுனில் நரங் மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் இணைந்து தயாரிக்கின்றனர். 'குபேரா' ஒரு பான்-இந்தியா பன்மொழி படம் ஆகும். இது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்படுகிறது.

Comentarios


bottom of page