top of page

‘ராட்சசன்’ சரவணன் நாயகனாக நடிக்கும் "குற்றப்பின்னணி"

  • mediatalks001
  • May 30, 2024
  • 1 min read





பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் 6-வது படம் ‘குற்றப்பின்னணி’


‘ராட்சசன்’ படத்தில் கிறிஸ்டோபர் கேரக்டராக மிரட்டிய சரவணன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் தீபாளி, தாட்சாயிணி. சிவா, ஹனிபா, பாபு, நேரு, லால், அகமல், ஷர்விகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.


ஒளிப்பதிவு சங்கர் செல்வராஜ், இசை ஜித், பாடல்கள் என்.பி.இஸ்மாயில், படத்தொகுப்பு நாகராஜ்.டி, சண்டைப் பயிற்சி ஆக்ஷன் நூர், வசனம் ரா.ராமமூர்த்தி, தயாரிப்பு ஆயிஷா அகமல், கதை திரைக்கதை இயக்கம் என்.பி.இஸ்மாயில்.


‘வாங்க வாங்க’, ‘ஐ.ஆர்.8’ போன்ற படங்களை இயக்கிய என்.பி. இஸ்மாயில் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.


தற்போது நாட்டில் நடைபெறும் தினசரி செய்திகளால் நாம் கேட்டும் பார்த்தும் திகைக்கக் கூடிய பெண்கள் சார்ந்த குற்றங்களை பின்புலமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை களத்தில், பெண்கள் தவறான நடவடிக்கைகளால் குடும்பம் மற்றும் தனி மனிதன் எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பதை சஸ்பென்ஸ் திரில்லருடன் சொல்வதே இந்த ‘குற்றப்பின்னணி’ படம்.


குற்றப்பின்னணிக்கு பின்னணி இசை பக்கபலமாக உள்ளது. படத்தில் இரண்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளது.


சென்னைக்கு அருகிலுள்ள செங்கல் சூளையில் பிரம்மாண்டமாக சண்டைக் காட்சி எடுக்கப்பட்டது.


என்.பி‌.இஸ்மாயில் இயக்கத்தில், ஆயிஷா அகமல் தயாரித்துள்ள குற்றப்பின்னணி படம் மே மாதம் 31'ம் தேதி திரைக்கு வருகிறது!


அண்ணாமலையார் சினி ஆர்ட்ஸ் அருணை டி.ராஜாராம் சுமதி தமிழகமெங்கும் திரையிடுகிறார்கள்.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page