top of page

திரைப்பட தயாரிப்பாளரான பத்திரிகையாளர் 'கவிதா'


திரைப்படத் தயாரிப்பாளர் ஆனார் பத்திரிகையாளர் கவிதா

‘தினமலர்’ நாளிதழில் திரைப்பட பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறவர் கவிதா. அதோடு திரைப்பட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். கவிதை நடையிலான இவரது நிகழ்ச்சி தொகுப்புக்கு தனி ரசிகர் வட்டமே உள்ளது. இதோடு திரைப்பட பத்திரிகையாளர் சங்கத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

ஏற்கெனவே கொலை விளையும் பூமி, சாக்லெட், தாத்தா என்கிற குறும்படங்களை தயாரித்த கவிதா தற்போது திரைப்பட தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். தனது உறவினர்களுடன் இணைந்து தனது இம்ப்ரஸ் பிலிம்ஸ் புரொடக்ஷன் சார்பில் தயாரிக்கிறார், மெட்ரோ புரொடக்ஷன் என்ற நிறுவனம் இணை தயாரிப்பில் இணைந்துள்ளது. இந்த படத்தில் அவரது சகோதரி மகன் கதை நாயகனாக நடிக்கிறார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட் கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

முன்னதாக படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வையை நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் இன்று வெளியிடுகிறார். திரைப்பட தயாரிப்பாளராகி இருக்கும் கவிதாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Comentarios


©2020 by MediaTalks. 

bottom of page