MediaTalks Logo
Header Advertisement
cinema news
16 March 2024 at 23:39•4 Views

'பிரேமலு' - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
'பிரேமலு' - விமர்சனம்

கல்லூரியில் படிக்கும் மாணவனான நாயகன் நஸ்லேன் தன்னுடன் படிக்கும் சக மாணவியை ஒரு தலை காதலாக காதலித்து வருகிறார் . கல்லூரி காலம் முடியும் நேரத்தில் அந்த பெண்ணிடம் காதலைக் கூற, அந்த காதல் தோல்வியில் முடிவடைகிறது.

அந்த காதல் சோகத்தில் இருந்து வெளியேற படிப்பு முடிந்து லண்டன் போக முயற்சிக்கிறார். ஆனால் விசா கிடைக்காததால் அதுவும் முடியாமல் போகிறது.

இந் நேரத்தில் நஸ்லேன் மேற்கொண்டு ஒரு கோர்ஸ் படிப்பதற்காக ஹைதராபாத் செல்கிறார்.

ஒரு கட்டத்தில் கோர்ஸ் நடத்தும் பேராசிரியர் திருமணத்திற்காக செல்லும் நஸ்லென் அந்த திருமண நிகழ்ச்சியில் சாப்ட்வேர் துறையில் இருக்கும் நாயகி மமிதா பைஜுவை சந்திக்கும் நஸ்லென், அவர் மீது காதல் வயப்படுகிறார்.

எந்த ஒரு விஷயத்தையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், யாருக்கும் பயப்படாமல், தனக்கு பிடித்தமான செயலை மட்டும் செய்து கொண்டு தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் மமிதாபைஜு .

இதனையடுத்து மமிதா பைஜுவிற்கும் அவருடன் வேலை பார்க்கும் ஷ்யாம் மோகனும் காதல் இருப்பதாக நண்பர்கள் மூலம் தெரிந்துக் கொள்கிறார் நஸ்லென் .

தொடர்ந்து மமிதா பைஜுவை காதலிக்கும் நஸ்லென், ஒரு இடத்தில் தன் காதலை வெளிப்படுத்தி விடுகிறார்

முடிவில் நாயகி மமிதா பைஜு நாயகன் நஸ்லென் காதலை ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’பிரேமலு’

நாயகனாக நடிக்கும் நஸ்லென், இயல்பான நடிப்பில் கண்டதும் காதல், காதலுக்காக உருகுவது, காதல் தோல்வியால் வாடுவது என சிறப்பான நடிப்பை எதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார்

நாயகி மமிதா பைஜு நட்பு, காதல் என நடிப்பில் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறார்.

நாயகனின் நண்பனாக நடித்திருக்கும் சங்கீத் பிரதாப், டைமிங் காமெடி மூலம் ரசிக்க வைத்து இருக்கிறார். ஷ்யாம் மோகன், அகிலா பார்கவன், மீனாட்சி ரவீந்திரன் ஆகியோர் நடிப்பு பாராட்டுக்குரியது

விஷ்ணு விஜய்யின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக உள்ளது.

ஒளிப்பதிவாளர் அஜ்மல் கேரளா,,, ஆந்திர கிராமப் பகுதிகளை நேர்த்தியாக காட்சிப்படுத்தி இருக்கிறார்

இயல்பான காதல் கதையின் அழகியலோடு மென்மையான காதல் உணர்வை யதார்த்தமான நகைச்சுவையோடு இளைஞர்கள் கொண்டாடும் ஜாலியான காதல் படமாக பாராட்டும்படி படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர்.கிரிஷ் ஏ.டி,

ரேட்டிங் ; 3.5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: