top of page

' 7G ' - விமர்சனம் !

  • mediatalks001
  • Jul 5, 2024
  • 2 min read

ஐடி நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் ரோஷன் பஷீர் - ஸ்ம்ருதி வெங்கட் தம்பதி தன் மகனுடன் சொந்தமாக ஒரு அடுக்குடிமாடி குடியிருப்பில் புதியதாக குடியேறுகிறார்கள்.

நீண்டநாள் கனவான சொந்த வீடு கனவு நினைவானதால் ஸ்ம்ருதி வெங்கட் மகிழ்ச்சியாக இருக்கிறார். அதே சமயம் ரோஷன் பஷீரின் அலுவலக தோழி சினேகா குப்தா ரோஷனை அடைவதற்காக மாயமந்திர முயற்சிகளில் ஈடுபடுவதோடு,,,,,, புதியதாக வீடு வாங்கியதால் ஐடி நிறுவனத்தில் தன்னுடன் பணிபுரிபவர்களுக்கு ஸ்ம்ருதி வெங்கட் – ரோஷன் தம்பதியினர். தனது வீட்டில் விருந்து வைக்கும் நேரத்தில்,,,,ரோஷனை ஒரு தலை காதலாக கொண்ட சினேகா குப்தா தன் காதல் நிறைவேறாமல் போனதால் அந்த விருந்தில், மாந்த்ரீக சூனிய உருவ பொம்மையை யாருக்கும் தெரியாமல் ஸ்ம்ருதி வெங்கட் வீட்டில் ஒளித்து வைத்து செல்கிறாள்.

இதற்கிடையே, ரோஷன் பஷீர் வேலை விசயமாக வெளியூர் செல்ல, தனியாக இருக்கும் ஸ்ம்ருதி வெங்கட் பல்வேறு அமானுஷ்ய பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்.

அந்த வீட்டில் ஒரு சிறுவனுடன் அடைப்பட்டு இருக்கும் அமானுஷ்ய சக்தியான ஆத்மா ஒன்று திடீரென்று வெளியாகி, ஸ்ம்ருதி வெங்கட்டை மிரட்டுவதோடு, “இது என் வீடு, இங்கு யாரையும் அனுமதிக்க மாட்டேன்” என்று கூறி அவரை விரட்ட முயற்சிக்கிறது. ஆனால் ஸ்ம்ருதி வெங்கட் அதன் மிரட்டலுக்கு பயப்படாமல் அந்த ஆத்மா யார்? என்பதை அறிய அதனுடன் போராடுகிறார் .

முடிவில் அந்த வீட்டில் ஒரு சிறுவனுடன் இருக்கும்அமானுஷ்ய சக்தியான ஆத்மா யார் ? ஸ்ம்ருதி வெங்கட் அந்த அமானுஷ்ய சக்தியிடம் இருந்து தன் வீட்டையும், பிள்ளையையும் காப்பாற்றினாரா ? இல்லையா? என்பது தான் '7G' படத்தின் கதை..


படத்தின் முக்கியமான கதாபாத்திரமாக நடித்திருக்கும் சோனியா அகர்வால் கதையுடன் இணைந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.


படத்தின் மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் ஸ்ம்ருதி வெங்கட், காதல், ஏக்கம், பயம், தைரியம் என அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .


ஸ்ம்ருதி வெங்கட்டின் கணவராக நடித்திருக்கும் ரோஷன் பஷீர், மனைவியுடன் ஒரு பாட்டு, சினேகா குப்தாவுடன் ஒரு பாட்டு என சில காட்சிகளில் மட்டும் நடித்தாலும் கவனம் பெறுகிறார் .

ரோஷன் பஷீரின் அலுவலக தோழியாக நடித்திருக்கும் சினேகா குப்தா,காமெடி கலந்த வில்லனாக இசையமைப்பாளர் சித்தார்த் விபின், சுப்பிரமணிய சிவா , கல்கி என நடித்த நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர் .

ஒளிப்பதிவாளர் கண்ணாவின் ஒளிப்பதிவும் ,,,இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்கும்படி இருக்கிறது.


வழக்கமான பழி வாங்கும் பேய் கதையாக இருந்தாலும் படம் பார்ப்பவர்கள் அலறாதபடி பயமுறுத்தாத பேயாக குழந்தைகள் பார்க்க கூடிய விதத்தில் ஒரு விளையாட்டு பொம்மையை அமானுஷ்ய சக்தியாக காட்சிகளில் இணைத்து அனைவரும் ரசிக்கும் திகில் கலந்த பேய் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் ஹாரூண்,


ரேட்டிங் - 3 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page