top of page
mediatalks001

பிரைம் வீடியோவின் தமிழ் திகில் ஒரிஜினல் ​​'தி வில்லேஜ்' சீரிஸின் அசத்தலான இசை ஆல்பம்


பிரைம் வீடியோவில் வெளிவரவிருக்கும் தமிழ் திகில் ஒரிஜினல் ​​தி வில்லேஜ் சீரிஸின் அசத்தலான இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளது

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ் திகில், ஒரிஜினல் வெப்சீரிஸ் ​​தி வில்லேஜ் சீரிஸுக்கு, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார், பாடல் வரிகளை மதுரை சொல்ஜர் (சியான் சாஹீர், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி, சினேகன், குரு அய்யாதுரை மற்றும் ஷில்பா நடராஜன் எழுதியுள்ளனர். முத்து சிற்பி(காளிமுத்து), சிந்துரி விஷால், மதிச்சியம் பாலா(ஜி. முருகன்), குரு அய்யாதுரை, மதுரை சோல்ஜர் (சியான், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி, கிரிஷ் கோபாலகிருஷ்ணன், டி.பிரதிமா பிள்ளை, ஷில்பா நடராஜன் ஆகியோர் பாடியுள்ளனர்.

ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில், B.S.ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ள தி வில்லேஜ் தமிழ் ஒரிஜினல் சீரிஸை இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். நவம்பர் 24 முதல் இந்தியா மற்றும் 240+ நாடுகளிலுள்ள ப்ரைம் உறுப்பினர்கள் இந்த திகில் சீரிஸை ஸ்ட்ரீம் செய்து ரசிக்கலாம்.

மும்பை – நவம்பர் 14, 2023 - இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங்க் தளமான மிகவும் பிரைம் வீடியோ, தங்களின் வரவிருக்கும் தமிழ் ஒரிஜினல் திகில் தொடரான ​​தி வில்லேஜ் சீரிஸின் இசை ஆல்பத்தை இன்று வெளியிட்டது. இந்த ஆல்பத்தில் ஆழமான மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் 11 பாடல்கள் உள்ளன, ஒவ்வொரு பாடல்களும் சமூகத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த இசை ஆல்பத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை மதுரை சோல்ஜர் (சியான் சாஹீர், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி, சினேகன், குரு அய்யாதுரை மற்றும் ஷில்பா நடராஜன் ஆகியோர் எழுதியுள்ளனர். திருவிழாவின் துடிப்பான கொண்டாட்டம் முதல் நினைவு மோரியின் புதுமையான அனுபவங்கள் மற்றும் கண்ணுறங்கு கண்மணியே என்ற மென்மையான தாலாட்டு வரை, இந்த ஆல்பம் காலத்தால் மனித உணர்வுகளான காதல், தியாகம் மற்றும் காலத்தின் அழிக்க முடியாத நினைவுகளை வெளிப்படுத்துகிறது.

ஆல்பத்தின் டிராக்லிஸ்ட் இதோ –

1. திருவிழா - பாடியவர்: முத்து சிற்பி (காளிமுத்து), சிந்துரி விஷால், மதிச்சியம் பாலா (ஜி.நந்தபாலா முருகன்) ; பாடலாசிரியர்: சினேகன்

2. தாயி பாடல் (பாரம்பரிய வகை டியூன்) - பாடியவர்: மதிச்சியம் பாலா(ஜி.நந்தபால முருகன்), குரு அய்யாதுரை, சிந்துரி விஷால் ; பாடலாசிரியர்: சினேகன்

3. தாயி பாடல் (திகில் வகை டியூன்) - பாடியவர்: குரு அய்யாதுரை ; பாடலாசிரியர்: சினேகன்

4. மெமெண்டோ மோரி - பாடகர் & பாடலாசிரியர்: மதுரை சோல்ஜர் (சியான், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி

5. மியூட்டேசன் தீம் (தி வில்லேஜ் டைட்டில் டிராக்) - பாடியவர்: சிந்துரி விஷால் , குரு அய்யாதுரை ; பாடலாசிரியர்: சினேகன்

6. கண்ணுறங்கு கண்மணியே (சகோதரியின் மரணப் பாடல்) - பாடியவர்: கிரிஷ் கோபாலகிருஷ்ணன் ; பாடலாசிரியர்: சினேகன்

7. மண்ண வெட்டி (தொழிலாளர் பாடல்) - பாடியவர்: குரு அய்யாதுரை ; பாடலாசிரியர்: குரு அய்யாதுரை

8. ஜிகும்-வா - பாடியவர்: டி.பிரதிமா பிள்ளை , ஷில்பா நடராஜன் ; பாடலாசிரியர்: ஷில்பா நடராஜன்

9. நீல குகை

10. வேட்டையன் தீம்

11. தாயி பாடல் (பேய் டுயூன்) - பாடியவர்: கிரிஷ் கோபாலகிருஷ்ணன் ; பாடலாசிரியர்: சினேகன்


இந்த சீரிஸை இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார், தி வில்லேஜ் சீரிஸ், அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷாமிக் தாஸ்குப்தாவின் ஆகியோர் எழுதிய கிராஃபிக் ஹாரர் நாவலிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். இந்த கிராஃபிக் திகில் நாவல் யாழி ட்ரீம் ஒர்க்ஸ் வெளியீடாக வெளிவந்தது.

தனது குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் ஒருவனின் அபாரமான போராட்டக் கதையைச் சொல்வது தான் தி வில்லேஜ் சீரிஸ்.

ஸ்டுடியோ சக்தி நிறுவனத்தின் சார்பில், இந்தத் தொடரை B.S. ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார். சீரிஸுக்கான திரைக்கதயை மிலிந்த் ராவ், தீரஜ் வைத்தி மற்றும் தீப்தி கோவிந்தராஜன் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்தத் சீரிஸில், பிரபல தமிழ் நடிகர் ஆர்யா, திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மாயன், பி.என். சன்னி, முத்துக்குமார் கே., கலைராணி எஸ்.எஸ்., ஜான் கொக்கன், பூஜா, வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் ஆகியோருடன் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தி வில்லேஜ் சீரிஸ் பிரைம் வீடியோவில் நவம்பர் 24 முதல் இந்தியா மற்றும் 240+ நாடுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளுடன், ஆங்கில சப்டைட்டில்களுடன் திரையிடப்பட உள்ளது.

留言


bottom of page