top of page
mediatalks001

நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட 'லாரா' டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்!



நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட 'லாரா' டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்!


இன்வெஸ்டிகேஷன் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கும் 'லாரா'


' சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் சம்பவத்தை எடுத்துக் கொண்டு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகி இருப்பது தான்

'லாரா '.


இப்படத்தை அறிமுக இயக்குநர் மணி மூர்த்தி இயக்கி உள்ளார்.எம் கே அசோசியேட்ஸ் என்ற பெயரில் கோவையில் கட்டுமானத் துறையில் முத்திரை பதித்த தொழிலதிபர் M.கார்த்திகேசன் தனது எம். கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார்.


ஆர்.ஜெ.ரவின் ஔிப்பதிவு செய்துள்ளார். ரகு சரவண் குமார் இசையமைத்துள்ளார். வளர்பாண்டி படத்தொகுப்பு செய்துள்ளார்.பாடல் வரிகள் - M.கார்த்திகேசன், முத்தமிழ் செய்துள்ளார்கள்.

'லாரா ' படத்தில் பிடிச்சிருக்கு, முருகா புகழ் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.அனுஸ்ரீ, வெண்மதி, வர்ஷினி என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் மேத்யூ வர்கீஸ் , கார்த்திகேசன், எஸ்.கே. பாபு ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

சஸ்பென்ஸ்,பரபரப்பு நிறைந்த திரில்லர்,மர்மங்கள் கொண்ட புலனாய்வு என்று மூன்றும் இணைந்த வகைமையில் அமைந்த கதையே

'லாரா 'என்கிற விறுவிறுப்பான படமாக உருவாகியுள்ளது. சில நாட்கள் முன்பு படத்தின் டைட்டில் லுக்கை நடிகர் சத்யராஜ் அவர்கள் வெளியிட்டு பாராட்டிய நிலையில், தற்போது

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை தங்கள் மதிப்பிற்குரிய நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் வெளியிட்டது, தங்களுக்கு மகிழ்ச்சி எனவும் படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்து, லாரா தலைப்பு மற்றும் கதைக்களம் பற்றி கேட்டு பாராட்டி வாழ்த்தியது இப்படத்திற்குக் கிடைத்த இன்னொரு பலமாக மாறியுள்ளது எனவும் படக்குழுவினர் புதிய உற்சாகத்துடன் இருக்கிறார்கள்.


'லாரா 'விரைவில் திரையில் !

Comments


bottom of page