top of page

பல்லாவரத்தில் நடிகர் மன்சூர் அலிகானின் "இந்திய ஜனநாயகப் புலிகள்" கட்சி சார்பில் நடைபெற்ற மாநாடு !

mediatalks001









நடிகர் மன்சூர் அலிகானின் "இந்திய ஜனநாயகப் புலிகள்" பல்லாவரம் மாநாட்டு தீர்மானங்கள் ;

1. வாக்கு இயந்திரங்களை ஒழித்து

வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

2. மது, கஞ்சா, போதைப்பொருள் தமிழ் நாட்டில் ஒழிக்கப்பட வேண்டும்.

3. வேளாண் விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க கோரி

டெல்லியில் போராடிவரும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

4. காவிரியின் குறுக்கே

மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் அடாவடிப் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

5.தமிழக மீனவர்கள் ஒருவரும் இனி கைது செய்யப்பட கூடாது தமிழ் ராணுவப் படை காசிமேடு முதல் கன்னியாகுமரி வரை பாதுகாக்க வேண்டும்.

6.தமிழ்நாட்டு கல்வி நிலையங்கள்

கட்டாய தமிழே பயிற்றுமொழி சட்டம் இயற்றிட வேண்டும்.

7.சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க சட்டமன்றத்தில் அரசாணை வெளியிட வேண்டும்.

8. 10 ஆண்டுகளை கடந்த நீண்ட நாள் சிறைவாசிகளை விடுதலை செய்திட வேண்டும்.

9. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்குமான சமூகநீதியை உறுதிசெய்க.

10. தொடரும் சாதியாதிக்க படுகொலைகளை தடுத்து நிறுத்திட சிறப்பு சட்டம் இயற்றிடுக.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page