top of page
mediatalks001

இந்தியாவின் உள்ள எக்ஸ் தளத்தின் சிறந்த ஹேஸ்டாக்குகள் : ரெபெல் ஸ்டார் பிரபாஸிற்கு முதலிடம்!


இந்தியாவின் உள்ள எக்ஸ் தளத்தின் சிறந்த ஹேஸ்டாக்குகள் : ரெபெல் ஸ்டார் பிரபாஸிற்கு முதலிடம்!

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் - புதிய சாதனைகளை நிகழ்த்துவதிலும், பல சாதனைகளை முறியடிப்பதிலும் ஏனைய நட்சத்திர நடிகர்களில் தனித்து நிற்கிறார். அவருடைய பிரத்யேகமான ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பின் காரணமாக.. பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை முறியடிப்பதுடன், இந்திய அளவில் மட்டும் இல்லாமல் உலகளவில் அவருடைய திரைப்படத்தை ரசிகர்களுக்காக கொண்டு செல்வதிலும் தனித்துவத்தை பின்பற்றுகிறார்.

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் - தெலுங்கு திரையுலகின் வணிக எல்லையிலிருந்து பான் இந்திய அளவிலான சந்தையின் நட்சத்திர ஐகானாக உயர்ந்திருக்கிறார். ட்விட்டர் இந்தியா நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தியாவில் உள்ள எக்ஸ் தளத்தின் ( முன்னர் ட்விட்டர் ) சிறந்த ஹேஸ்டாக்குகளின் பட்டியலில் அவருடைய புகழ் சிறப்பிக்கப்பட்டிருக்கிறது. பிரபாஸ் பொழுதுபோக்கு வகைகளில் சிறந்த 10 ஹேஸ்டாக்குகளை பெற்ற ஒரே நட்சத்திர நடிகராக உருவெடுத்திருக்கிறார்.

இந்த சாதனை... பிரபாஸின் சமூக வலைதளம் மற்றும் சமூக ஊடகங்களில் அவரது செல்வாக்கிற்கு சான்றாகியிருக்கிறது. இது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 'ரெபெல் ஸ்டார்' பிரபாஸின் நடிப்பில் 'கல்கி 2898 AD' மற்றும் ' ராஜா ஸாப்' ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட்டுகளுடன்.. பிரபாஸ் பார்வையாளர்களை மேலும் கவர்ந்து, அந்த வெற்றியை தன்னுடைய ரசிகர்களுடன் கொண்டாடவிருக்கிறார்.

Comments


bottom of page