top of page

'வட்டார வழக்கு' விமர்சனம் கிராமத்து மண்ணின் இயல்புடன் ஒரு எதார்த்தமான படம் !

mediatalks001

சமயநல்லூரில் உள்ள தோடனேரி கிராமத்தில் 1962 வருட கால முதல் இரு பங்காளி குடும்பங்களிடையே கொலை வெறி பகை இருந்து வருகிறது. இந்நிலையில் தன் குடும்பத்தை சேர்ந்தவர்களை மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவமானப் படுத்தியதால் நாயகன் சந்தோஷ் நம்பி ராஜன் அதில் சிலரை கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு சென்று சில நாட்களுக்கு பின் ஜாமினில் வெளியே வருகிறார் .

ஜாமினில் வெளியே வந்த சந்தோஷ் நம்பிராஜனை அந்த குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் திட்டம் போட்டு தீர்த்து கட்ட முயற்சிக்கிறார்கள்.

முடிவில் சந்தோஷ் நம்பிராஜனை திட்டமிட்டபடி மற்றொரு குடும்பம் பழிவாங்கியதா?

பங்காளிகளான இரு குடும்பங்களுக்கு இடையே பகை ஏற்பட காரணம் என்ன? சந்தோஷ்நம்பிராஜன் அந்த குடும்பத்தின் கொலை தாக்குதலிருந்து தப்பித்தாரா? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'வட்டார வழக்கு'


கதையின் நாயகனாக நடிக்கும் சந்தோஷ் நம்பிராஜன் இயல்பான நடிப்பில் உடல் மொழியில் நடை ,உடை பேசும் வசன உச்சரிப்பு என கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .


நாயகியாக நடிக்கும் ரவீணா ரவி மண் மணம் மாறாத கிராமத்து பெண்ணாக பாராட்டும்படியான நடிப்பில் வாழ்ந்து இருக்கிறார்.

மற்ற வேடங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அனைவரும் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இயல்பான நடிப்பில் கதைக்களத்தில் வாழ்ந்துள்ளனர் .


படத்தின் மற்றொரு நாயகன் இளையராஜா இசைஞானியின் இசையில் காதல் பாடல்களில் இனிமை. பின்னணி இசையில் நீண்ட நாட்களுக்கு பின் ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார் .


ஒளிப்பதிவாளர்கள் சுரேஷ் மணியன் மற்றும் டோனி சான் ஒளிப்பதிவில் கதையுடன் ரசிகர்கள் பயணிக்கும்படி காட்சிகளில் எதார்த்தம் .


பல வருட பங்காளி சண்டையை மையமாக வைத்து இயல்பான திரைக்கதையுடன் நடிக்கும் நடிகர்கள் அனைவரையும் காட்சிகளுடன் இணைந்து சிறப்பாக நடிக்க வைத்து கிராம மக்களின் வாழ்வியல் அழகோடு மண் வாசனை நிறைந்த எதார்த்த சினிமாவாக அனைவரும் ரசிக்கும்படி இயக்கியுள்ளார் இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன்.


ரேட்டிங் ; 3.5 / 5


கிராமத்து மண்ணின் இயல்புடன் ஒரு எதார்த்தமான படம் !

コメント


bottom of page