top of page

'ரகு தாத்தா' - விமர்சனம் !


தமிழகத்தில் உள்ள வள்ளுவன்பேட்டை கிராமத்தில் இந்தி எதிர்ப்பு காலக்கட்டத்தில் தீவிர இந்தி திணிப்பை எதிர்த்து வாழ்ந்து வரும் கீர்த்தி சுரேஷ் . புனைப் பெயரில் கதைகள் எழுதும் எழுத்தாளராகவும்,எந்த வகையிலும் தனது கிராமத்தில் வள்ளுவன் பேட்டையில் இந்தி மொழி நுழைந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.


இந்தி திணிப்பு வேண்டாம் என மக்களை திரட்டி பல போராட்டங்களையும் நடத்தி வருகிறார்.


இந்நிலையில் அதே கிராமத்தில் மெட்ராஸ் சென்ட்ரல் வங்கியில் வேலை பார்த்து வரும் கீர்த்தி சுரேஷின் எழுத்துக்களுக்கும் கொள்கைகளுக்கும் ரசிகனாக காட்டிக் கொள்ளும் பொறியாளரான ரவீந்திர விஜய் நட்பாக பழகுவது போல் ஒரு தலையாய் காதலிக்கிறார் .


இந்நேரத்தில்தாத்தா எம் எஸ் பாஸ்கருக்கு வயிற்றில் புற்றுநோய் இருப்பதை குடும்பத்தினர்களுக்கு தெரிய வர அதிர்ச்சியாகின்றனர்.

அதனால், அவர் இறப்பதற்கு முன், புஹாரி பிரியாணி சாப்பிடுவது, எம்.ஜி. ராம்சந்திரனுடன் புகைப்படம் எடுப்பது, கீர்த்தி சுரேஷின் திருமணத்தைப் பார்ப்பது என மூன்று எளிய நிறைவேறாத ஆசைகளை கூறுகிறார்.


தாத்தாவின் ஆசைக்காக குடும்பத்தினர் பார்க்கும் மாப்பிள்ளையை நிராகரித்து மக்களின் நலனுக்காக உழைக்கும் நண்பரான ரவீந்திர விஜய்யை திருமணம் செய்ய முடிவு செய்கிறார்.

கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததை அறிந்து முழு குடும்பமும் சந்தோசமாக இருக்கிறது.

இச் சமயத்தில் கா பா என்கிற புனை பெயரில் எழுதும் பெண் எழுத்தாளர் என்று ஒரு மொட்டை கடிதாசியாக கீர்த்தி சுரேஷிற்கு ஒரு கடிதம் வருகிறது.

அந்த கடிதத்தை எழுதியது வருங்கால கணவன் ரவீந்திர விஜய் என கண்டுபிடிக்கும் கீர்த்தி சுரேஷ் நிச்சயம் ஆன ரவீந்திர விஜய் உண்மையில் மிகவும் மோசமானவர், பெண் அடிமைத்தனத்தை ஆதரிப்பவர் என கீர்த்தி சுரேஷுக்கு தெரிய வருகிறது.


உண்மை தெரிந்து கொண்டு திருமணத்தை நிறுத்த போராடும் கீர்த்தி சுரேஷ் முடிவில் தாத்தாவின் கடைசி ஆசையான ரவீந்திர விஜய்யை திருமணம் செய்து கொண்டாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'ரகு தாத்தா'


கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் இந்தி திணிப்பை எதிர்ப்பதுடன் பெண்ணியம் பேசும் புரட்சிகர பெண்ணாக ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .


வழக்கமான நடிப்பில் கீர்த்தி சுரேஷின் தாத்தாவாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், கதையின் நாயகனாக ரவீந்திர விஜய் , ராஜேஷ் பாலச்சந்திரன், இஸ்மத், பானு,ராஜிவ் ரவிந்திரநாதன், தேவதர்ஷினி மற்றும் ஆனந்தசாமி என நடித்த நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர்

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ,ஒளிப்பதிவாளர் யாமினி யக்ஞமூர்த்தியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !


இந்தி திணிப்பையும் அதற்கு எதிரான போராட்டத்தை மையமான கதையை அதன் பின் இந்தி திணிப்பை பற்றிய காட்சிகள் எதுவும் இல்லாமல் முழுக்க நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுமன்குமார்.



ரேட்டிங் -3 / 5

Comentarios


bottom of page