top of page

உலகளவில் 500 கோடி ரூபாயைக் கடந்து வசூல் செய்து புதிய சாதனையை படைத்த' சலார் பார்ட் 1 -சீஸ்ஃபயர்'

  • mediatalks001
  • Dec 28, 2023
  • 1 min read

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் 'சலார் பார்ட் 1 -சீஸ்ஃபயர்' உலகளவில் பாக்ஸ் ஆபிசில் 500 கோடி ரூபாயைக் கடந்து வசூல் செய்து புதிய சாதனையை படைத்திருக்கிறது..!

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 'கே ஜி எஃப்' இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'சலார் பார்ட் 1 சீஸ்ஃபயர்'. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைந்தது. வெளியான முதல் நாளில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 178.7 கோடி ரூபாயை வசூல் செய்து புதிய சாதனையை படைத்தது. அத்துடன் இந்தியா முழுவதும் அற்புதமான ஒப்பனிங்கை பெற்ற ஒரே இந்திய திரைப்படம் என்ற பெருமிதத்தையும் பெற்றது. இத்திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனையை செய்து.. தற்போது 500 கோடி ரூபாயை கடந்திருக்கிறது.‌ அத்துடன் இந்த ஆண்டின் மிகப்பெரிய பொழுது போக்கு படைப்புகளைப் பார்வையிடும் பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய திரைப்படமாகவும் இப்படம் திகழ்கிறது.‌

'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் வெளியான 'பாகுபலி 1', 'பாகுபலி 2' ஆகிய படங்களுக்குப் பிறகு, 500 கோடி ரூபாய் வசூலைக் கடந்த மூன்றாவது திரைப்படம் என்ற சாதனையும் 'சலார் பார்ட் 1 சீஸ்ஃபயர்' படைத்திருக்கிறது.‌

இத்திரைப்படம் வெளியானதிலிருந்து ரசிகர்கள், பார்வையாளர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்களிடமிருந்தும் ஏகோபித்த அன்பையும், பாராட்டையும் பெற்றிருக்கிறது.‌ கற்பனை திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் நீல் உருவாக்கிய கான்சார் எனும் புனைவு உலகத்தின் வாழ்க்கை.. அதில் இடம் பெற்ற ஆக்சன் நிறைந்த உலகம்.. ஆகியவற்றை அவருடைய பிரத்யேக பாணியில் வழங்கிய விதம்.. 'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் மற்றும் ஏனைய நட்சத்திர நடிகர்களின் கடும் உழைப்பு.. தொழில்நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு ... ஆகிய அனைத்தும் மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றிருக்கிறது

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் 'சலார் பார்ட் 1- சீஸ்ஃபயர்' படத்தில் 'ரெபல் ஸ்டார்' பிரபாஸ், பிருத்விராஜ் சுகுமாறன், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். இத்திரைப்படம் தற்போது உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page