top of page

ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்படும்’விருமன்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் !


ரசிகர்கள் முன்னிலையில் கார்த்தி நடித்துள்ள ’விருமன்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்படுகின்றன.


2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க,

முத்தையா இயக்கத்தில்,

கார்த்தி நடித்துள்ள படம், ’விருமன்’. இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் , இந்தப் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். இதில், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.


வரும் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ’கஞ்சா பூவு கண்ணால’ பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் மற்றப் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, ரசிகர்கள் முன்னிலையில் வரும் 3ம் தேதி நடக்கிறது. மதுரை, ராஜா முத்தையா அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடக்கும் இந்த விழாவில், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சூரி, நடிகை அதிதி ஷங்கர், இயக்குநர் முத்தையா,

இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உட்பட படக்குழுவினர் பங்கேற்கின்றனர்.


இந்த விழாவில், இரண்டு பாடல்களுக்கு மேடையில் நடனமாடுகிறார்கள். ஒரு பாடலுக்கு நடன இயக்குநர் சாண்டி குழுவினரும் மற்றொரு பாடலுக்கு விஜய் டிவி அமீர் - பாவனியும் நடனமாடுகின்றனர்.


ARTIST LIST::


கார்த்தி

அதிதி சங்கர்

ராஜ்கிரண்

பிரகாஷ்ராஜ்

கருணாஸ்

சூரி

வடிவுக்கரசி

சிங்கம்புலி

மனோஜ் பாரதிராஜா

ராஜ்குமார்

இந்துமதி

வசுமித்ரா

நந்தினி

ஹலோ கந்தசாமி

வேல் முருகன்

TSR

ஓ.ஏ.கே.சுந்தர்

ரிஷி


TEACHNICIAN LIST::

தயாரிப்பாளர் - சூர்யா

இணை தயாரிப்பு - ராஜகேசர் கற்பூர சுந்தரபாண்டியன்

தயாரிப்பு நிறுவனம் - 2D Entertainment

இயக்குனர் - முத்தையா

இசை - யுவன் ஷங்கர் ராஜா

ஒளிப்பதிவு - S.K. செல்வகுமார்

எடிட்டிங் - வெங்கட்ராஜ்

நடனம் - ஷோபி, பாபா பாஸ்கர், சாண்டி, ஜானி

சண்டை - அனல் அரசு

கலை - ஜாக்கி

மக்கள் தொடர்பு - ஜான்சன்

bottom of page